பிப்ரவரி 22ல் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை;

  • IndiaGlitz, [Wednesday,February 13 2019]

ஒவ்வொரு வாரமும் குறைந்தபட்சம் மூன்று தமிழ் சினிமாக்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வரும் 22ஆம் தேதி ஐந்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

1. கண்ணே கலைமானே: இயக்குனர் சீனுராமசாமியின் முந்தைய படமான 'தர்மதுரை' நல்ல வெற்றியை பெற்ற நிலையில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜாவின் ஐந்து பாடல்கள் ஏற்கனவே நல்ல ஹிட்டாகியுள்ளதால் இந்த படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 'எந்தன் கண்களை காணோம்' என்ற பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவர்ந்துள்ளது.

2. எல்.கே.ஜி: ஆர்.ஜே. பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தின் புரமோஷன் பிரமாதமாக செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை சத்யம் தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பிரமாண்ட பேனரை அந்த வழியாக செல்பவர்கள் பார்த்து ரசிக்க தவறுவதில்லை. கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் கிண்டல் செய்துள்ள இந்த படத்திற்கு இதுவரை எந்த அரசியல்வாதிகளிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை. ஒருவேளை ரிலீசுக்கு பின் எதிர்ப்பு வந்தால் இந்த படத்திற்கு இலவச விளம்பரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது

3. 90ml: பிக்பாஸ் மூலம் பெரும் புகழ் பெற்ற நடிகை ஓவியா நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த படத்தின் டீசருக்கு சம அளவில் எதிர்ப்புகளும் ஆதரவும் கிடைத்து வருகின்றன. 'ஏ' சர்டிபிகேட் பெற்று இரட்டை அர்த்த வசனங்களுடன் கூடிய இந்த படம் இளைஞர்களை நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

4. டூ-லெட்: ரிலீசுக்கு முன்னரே தேசிய விருது பெற்ற இந்த படம் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளது. இயக்குனர் செழியனின் படைப்பில் உருவாகியுள்ள இந்த படம் பொதுமக்களிடையே வரவேற்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

5. பெட்டிக்கடை: சமுத்திரக்கனி நடிப்பில் . இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ள இந்த படம் சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பித்த பின்னர் பெட்டிக்கடைகளின் நிலை என்ன ஆனது? என்பதை அழுத்தமாக கூறும் படம்.