5 நிமிடங்கள்.. ஒரே ஷாட்.. ஃபைட் சேஸிங் காட்சிகள்.. விஷால் அடுத்த படத்தில் ஒரு ஆச்சரியம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஷால் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தில் ஒரே ஷாட்டில் 5 நிமிடங்கள் கொண்ட சேஸிங் மற்றும் ஸ்டண்ட் காட்சிகள் படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
விஷால் நடிப்பில், ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’ரத்னம்’. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் விஷால் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் விஷாலை வரவேற்கும் ஹரி, ’ஸ்டண்ட் மாஸ்டர் உங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார், என்ன என்று போய் கேளுங்கள்’ என்று கூறுகிறார்.
இதனை அடுத்து அவர் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணனை போய் பார்க்கும்போது ’ஒரே ஷாட்டில் 5 நிமிட ஸ்டண்ட் காட்சியை எடுக்க போகிறோம்’ என்று கூறுகிறார். ஒரே ஷாட்டில் 5 நிமிட ஸ்டண்ட் காட்சியா? என ஆச்சரியத்துடன் விஷால் கேட்கும் போது ’ஸ்டண்ட் காட்சி மட்டுமல்ல சேஸிங் காட்சியும் உண்டு’ என்று கூறுகிறார். இதனை அடுத்து விஷால் ஆச்சரியத்துடன் அந்த இடத்தை விட்டு நகர்கிறார்.
இந்த நிலையில் கனல் கண்ணன், ‘24 வருஷமா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் என்று கூறுவதோடு இந்த வீடியோ முடிவுக்கு வருகிறது. இதனை அடுத்து ’ரத்னம்’ திரைப்படத்தில் ஒரே ஷாட்டில் 5 நிமிட ஸ்டண்ட் மற்றும் சேஸிங் காட்சிகள் இடம் பெற இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சியை திரையில் பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷால் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கும் இந்த படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்பட பலர் நடித்துள்ளனர். சுகுமார் ஒளிப்பதிவில், பாலாஜி கலை இயக்கத்தில், ஜெ படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
A sneak peek into the making of #Rathnam - as myself, director #Hari, DOP @mynnasukumar and stunt master Kanal Kannan plan a single shot action sequence 🔥
— Vishal (@VishalKOfficial) January 13, 2024
▶️ https://t.co/Os1yledAFa
A film by #Hari. Coming to theatres, summer 2024 & a @ThisisDSP musical @priya_Bshankar… pic.twitter.com/x9Ih7CaOso
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com