விஜய்யின் 'தளபதி 68' படத்தில் இந்த 5 பிரபலங்கள் உறுதியா? மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,October 03 2023]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தின் பூஜை நேற்று நடந்ததாக தகவல் வெளியான நிலையில் இன்று முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் முதல் கட்டமாக இந்த படத்தில் இடம்பெறும் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த பூஜையில் சில பிரபலங்கள் கலந்து கொண்டதை அடுத்து அவர்கள் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்ட மோகன், பிரசாந்த், மீனாட்சி சவுத்ரி மற்றும் பிரபுதேவா ஆகியோர் நேற்றைய பூஜையில் கலந்து கொண்டதாகவும் இதனை அடுத்து அவர்கள் இந்த படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நேற்றைய பூஜையில் நடிகர் ஜெயராம் கலந்து கொண்டதாகவும் அவரும் இந்த படத்தில் முக்கிய இருப்பதாகவும் தெரிகிறது. இதுவரை இல்லாத அளவில் வித்தியாசமாக விஜய்யுடன் நடிக்கும் நட்சத்திரங்களை இயக்குனர் வெங்கட் பிரபு தேர்வு செய்து வரும் நிலையில் இந்த படம் வித்தியாசமாக இருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படம் நிச்சயம் விஜய் படங்களில் வித்தியாசமான ,அதே நேரத்தில் வெங்கட் பிரபுவின் பாணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

அடுத்த கட்டத்திற்கு செல்கிறது ஜிவி பிரகாஷ் திரைப்படம்.. குரூப் புகைப்படம் வைரல்..!

ஜிவி பிரகாஷ் நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்டத்திற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

ரஜினிகாந்த் உதவி செய்தும் காலமான பிரபல தயாரிப்பாளர்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல தயாரிப்பாளர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது சிகிச்சைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பலர் உதவினர்.

முதல் நாளே கண்டெண்ட் கொடுத்த விசித்ரா.. ஐஷுவின் ஆடை குறித்து சர்ச்சை கருத்து..!

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஆறு சீசன்களில் ஒரு வாரம் கழித்து தான் கண்டன்ட் கிடைக்கும் என்பதும் அதுவரை சாதாரணமாக போகும் என்பதைத்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த 7வது சீசன் முதல்

யார் யாரை நாமினேஷன் செய்தார்கள்: பிக்பாஸ் முதல் வார நாமினேஷன் முழு தகவல்கள்..

பிக் பாஸ் நிகழ்ச்சி பொதுவாக ஒரு வாரம் கழித்து சூடு பிடிக்கும். மேலும் முதல் வாரம் நாமினேஷன் இருக்காது என்பதையும் கடந்த ஆறு சீசன்களில் பார்த்தோம். ஆனால் ஏழாவது சீசனில் முதல் நாளே

'தலைவர் 170' படத்தின் 3வது நாயகி.. இன்னும் யாரெல்லாம் இருக்காங்க?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 170' என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த படத்தின் அறிவிப்புகள் ஒவ்வொரு சில மணி நேரத்திற்கு ஒரு முறை வெளியாகி