ஆசிபா கொலைக் குற்றம்: ஐந்து முக்கிய நபர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கோவில் ஒன்றில் அடைத்து வைத்து சில கொடூரர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த குற்றத்தில் அரசு அதிகாரிகள்ல், காவல்துறை அதிகாரிகள் சம்பந்தபப்ட்டிருந்ததால் இந்த குற்றத்தையும் தடயத்தையும் அழிக்க பல முயற்சிகள் நடந்தன. ஆனால் ஐந்து முக்கிய நபர்களால் இன்று குற்றவாளிகள் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஐந்து நபர்கள் யார் என்று பார்ப்போம்
1. தீபிகா சிங் ராஜ்வத்: ஆசிபாவின் வழக்கை வாதாடும் வழக்கறிஞர். இவர் இந்த வழக்கில் வாதாடக்கூடாது என்று ஒருசில வழக்கறிஞர்களே மிரட்டியதாகவும், ஒருசிலரிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மிரட்டல்களுக்கு அஞ்சாமல் இந்த வழக்கை தைரியமாக ஏற்று நடத்தி வருகிறார்.
2. ரமேஷ்குமார் ஜல்லா: ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் க்ரைம் பிராஞ்ச் காவல்துறை அதிகாரி. இந்த வழக்கிற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்து சரியான நேரத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் ஆதாரங்களை திரட்டியவர்
3. எஸ்பி வைத், ஜம்மு காஷ்மீர் காவல்துறை அதிகாரி: நாங்கள் இந்துவோ, முஸ்லீமோ இல்லை, நாங்கள் காவல்துறை அதிகாரிகள் என்று தைரியமாக கூறி இந்த வழக்கை மிரட்டல்களுக்கு அஞ்சாமல் சரியான பாதையில் விசாரணை செய்து பாராட்டுக்களை பெற்றவர்.
4. ஜம்மு காஷ்மீர் வர்த்தக சங்கம் : ஆசிபாவுக்கு நடந்த கொடுமையை கண்டு அதிர்ந்து போய், மாநிலம் முழுவதும் பந்த் நடத்த போவதாக பத்திரிகைகளுக்கு பேட்டியளித்து இந்த விஷயம் இந்தியா முழுவதும் பரவ காரணமாக இருந்தவர்கள்
5. ராகுல் பண்டிதா: எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான இவர் குற்றம் நடந்த முதல் நாள் முதல் இந்த குற்றம் குறித்து ஆதாரங்களுடன் பத்திரிகையில் எழுதி குற்றத்தை அம்பலப்படுத்தினார். இதனால் குற்றவாளிகள் எந்த நிலையிலும் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
மேற்கண்ட ஐந்து பேர் இல்லையென்றால் இந்த குற்றமே வெளியே தெரியாமல் மூடி மறைக்கப்பட்டிருக்கும். இப்படி ஒரு கொடுமை நடந்ததே உலகிற்கு தெரியாமல் இருந்திருக்கும்,.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments