close
Choose your channels

ஒரே ஒரு பாடலுக்கு 5 நடன இயக்குனர்கள்: சக்கை போடு போட்ட சந்தானம்

Tuesday, October 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் நகைச்சுவை நடிகராக இருந்த சந்தானம் தற்போது ஹீரோவாகி வெற்றி படங்களை கொடுத்து வரும் நிலையில் அவர் ஹீரோவாக நடித்து வரும் படங்களில் ஒன்று 'சக்க போடு போடு ராஜா'

சிம்பு இசையமைப்பாளராக அறிமுகமாகும் இந்த படத்தில் சந்தானத்திற்கு அறிமுகப்பாடல் ஒன்று உள்ளது. இந்த பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டதாகவும், இந்த பாடலுக்கு ராஜு சுந்தரம் , ஸ்ரீதர், தினேஷ், நோபல், ஜானி ஆகிய ஐந்து பிரபல நடன இயக்குனர்கள் பணியாற்றியதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கலக்கு மச்சா டவுளத்துள 
கால  வாரும் காலத்திலே 
கலங்க நா கோழையில்லே "
களத்திளே இறங்கி காளபோல 
ரைட்டு தாட்டு உள்ளத்திலே
வெச்சு இருக்கும் நல்ல புள்ள

என்று தொடங்கும் இந்த பாடலை ரோகேஷ் பாடல் எழுத அனிருத்  பாடியுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தை G.L.சேதுராமன் இயக்கியுள்ளார். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவில் ஆன்டனி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் விவேக், சம்பத் ராஜ் ,ரோபோ சங்கர், சஞ்சனா சிங்,VTV கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இசைவெளியீடு நவம்பர் 14 தேதி  சத்யம் திரை அரங்கில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment