இந்த வார நாமினேஷனில் சிக்கிய 5 பேர்.. தப்பித்த பூர்ணிமா, அர்ச்சனா..!

  • IndiaGlitz, [Monday,December 25 2023]

ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெற்று வரும் நிலையில் இன்றைய முதல் புரமோவில் ஓப்பன் நாமினேஷன் நடந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த வாரம் நாமினேஷனில் சிக்கியவர்கள் யார் யார் என்பதை பிக் பாஸ் தெரிவித்த நிலையில் இது குறித்து போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் கலந்துரையாடும் காட்சிகள் இன்றைய இரண்டாவது ப்ரோமோ வீடியோவில் உள்ளன.

இந்த வாரம் நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் என்ற பட்டியலில் மாயா, தினேஷ், மணி, ரவீனா மற்றும் விஷ்ணு ஆகிய ஐந்து பேர் உள்ளதாக பிக் பாஸ் அறிவித்துள்ளார். இதனை அடுத்து மணி முதலில் ’நான் தான் வந்து எல்லோரிடமும் திணித்தேன் என்று நிக்ஸன் கூறுவதாகவும், நான் பேசும்போது உனக்கு என்ன வந்துச்சு என்றும் அவர் ரவீனாவிடம் புலம்பி கொண்டிருக்கிறார்.

இதனை அடுத்து விசித்ரா, ‘தினேஷ் என்னை தொடர்ச்சியாக தப்பாவே பேசிகிட்டு இருக்கார்' என்று விஷ்ணுவிடம் கூறுகிறார். அதேபோல் தினேஷ் நிக்சனிடம் ‘இப்ப எதற்காக வாண்டெடா என்னுடைய பெயரை இழுக்கிறீர்கள், அவங்க போடுகிற வார்த்தைகள் என்னை ட்ரிகர் பண்ற மாதிரியே இருக்குது’ என்று கூறுகிறார்.

மொத்தத்தில் கடந்த வாரம் ஒற்றுமையாக இருந்த போட்டியாளர்கள் இறுதிப்போட்டி நெருங்கி உள்ளதை அடுத்து மீண்டும் ஒருவருக்கு ஒருவர் குறை சொல்ல தொடங்கிவிட்டார்கள். எனவே இனி அடுத்தடுத்த எபிசோடுகளில் என்ன நடக்கும் என்பதை இப்போது பொறுத்திருந்து பார்ப்போம்.