பெண்களுக்கும் Fitness ரொம்ப அவசியம்… உற்சாகப்படுத்தும் வைரல் வீடியோ!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொதுவாக உடல் தகுதி என்பது ஆண்களுக்கு மட்டும்தான் எனும் கருத்து இருந்து வருகிறது. இதில் பெண்களுக்கான உடற்பயிற்சி, வொர்க்அவுட், பாடிபில்டிங் போன்ற விஷயங்கள் மிகவும் அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது. அதுவும் பாடிபில்டிங் போன்ற விஷயங்கள் எல்லாம் பெண்களுக்கு ஒத்தே வராது எனக் கருதும் இக்காலக் கட்டத்தில் ஒரு தமிழ்பெண் வொர்க் அவுட்டில் அசத்தி வருகிறார். அவருடைய பிட்னஸ் தகுதி பார்ப்போரை வியக்க வைக்கும் அளவிற்கு இருக்கிறது.
அந்த வகையில் திவ்யா ராஜசேகரின் ஆரம்பக் காலம் நீச்சல் போட்டிகளில் ஆரம்பித்ததாகக் குறிப்பிடுகிறார். 130 க்கும் மேற்பட்ட நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு பல பரிசுகளைத் தட்டிச் சென்றிருக்கிறார். ஒரு கட்டத்தில் உடலில் பல காயங்கள் ஏற்பட்டு நீச்சல் போட்டியில் கலந்து கொள்ளவே முடியாது எனும் நிலைமைக்கு இவர் தள்ளப்பட்டதாகக் குறிப்பிடுகிறார். அப்போதுதான் இவரின் கனவு தடம் புரண்டு இருக்கிறது.
சிறிய வயதில் இருந்தே விளையாட்டு துறைகளில் ஆர்வம் காட்டி வந்த இவர் நீச்சல் போட்டிகளில் தேர்ந்த போட்டியாளராக வளர்ந்து வந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் காயங்கள் ஏற்பட்டு நீச்சல் செய்யவே முடியாது எனும் நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. கூடவே உடல் எடையும் 48 கிலோவில் இருந்த 84 கிலோவாக மாறி இருக்கிறது. இதை குறைக்க வேண்டும் எனும் ஆர்வம் கொண்ட திவ்யா முறையாக அவரின் கணவரிடமே உடற்பயிற்சியை பெற்றிருக்கிறார்.
உடற்பயிற்சி என்றால் வெறுமனே உடலைக் குறைக்க வேண்டும் எனும் அளவிற்கு இல்லாமல் முழுமையான உடல் தகுதியைப் பெறுவதற்கான வொர்க் அவுட்டிலும் ஆர்வம் காட்டி இருக்கிறார். இதனால் தற்போது உடல் எடை குறைந்ததோடு முறையாக உடல் தகுதியையும் பெற்றிருக்கிறார். இனி பெண்களுக்கான உடல் தகுதி போட்டிகளில் கலந்து கொண்டு எதிர்காலத்தை மாற்றி அமைக்கும் திட்டத்தில் இருப்பதாக திவ்யா தனது சுவாரசிய அனுபவத்தில் குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் பெண்களுக்கான பிட்னஸ் தகுதியில் ஆண்களும் ஆர்வம் காட்ட வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார். அதாவது ஆண்கள் தங்களது உடல் தகுதியில் ஆர்வம் காட்டுவதைப் போல பெண்களின் உடல் தகுதியிலும் ஆர்வம் காட்டி பெண்களை ஊக்குவிக்கும்போது பெண்களின் பிட்னஸ், வொர்க்அவுட் போன்ற விஷயமாக மாறிவிடும். அப்படி ஒரு நிலைமை வரவேண்டும் என குறிப்பிடுகிறார் திவ்யா.
அதோடு டிரஸ்ஸிங் முறை பற்றி கருத்துக் கூறும் திவ்யா எது இயல்பாக உங்களை இயல்பாக உணர வைக்கிறதோ அதுவே சிறந்த ஆடையாக இருக்க முடியும். வொர்க் அவுட்டிற்கு என்று தனி ஆடைகள் இருக்கின்றன. மற்றவர்கள் பார்க்கும்போது அது அவர்களின் கண்களை உருத்தலாம். ஆனால் ஜிம்மில் நம்மை இயல்பாக உணர வைக்க வேண்டும். அதுதான் சிறந்த ஆடையாக இருக்க முடியும். இதுபோன்ற ஆடை விஷயத்திலும் பெண்களுக்கு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தால் எதையும் சாதிக்க முடியாது எனப் பரபரப்பாக கருத்து கூறி இருக்கிறார் திவ்யா.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments