இன்று முதல் தமிழகத்தில் மீன்பிடிக்க தடை: அதிரடி உத்தரவு
- IndiaGlitz, [Friday,April 15 2022]
இன்று முதல் 61 நாட்களுக்கு தமிழகத்தில் மீன் பிடிக்க தடை என அறிவிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி தடை காலம் என ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை கடைப்பிடிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. மீன்களின் இனப்பெருக்க காலம் என்பதால் விசைப்படகுகளில் சென்று மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் 61 நாட்களுக்கு அதாவது ஜூன் 15ஆம் தேதி வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மீனவர்கள் இன்று முதல் மீன்பிடிக்க செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் விசைப்படகுகளில் சென்று மட்டுமே மீன்பிடிக்க தடை என்றும் நாட்டுப் படகுகளில் சென்று மீன்பிடிக்க தடை இல்லை என்பதால் மீனவர்கள் நாட்டுப்படகுகளில் மட்டும் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு மீனவர் பேரவை செயலாளர் தாஜுதீன் அவர்கள் இது குறித்து கூறியபோது ’ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.