ஜல்லி மீன்களால் உடல் ரீதியாக படாதபாடு படும் மீனவர்கள்..!
- IndiaGlitz, [Thursday,May 09 2019]
ராமநாதபுரம் மாவட்டத்தில், மீன் பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் பலர், ஜல்லி மீன்களால் பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
கடல் வாழ் உயிரினங்களில் ஒன்றான ஜெல்லி மீன்கள், 2000 ஆயிரத்திற்கும் அதிகமான வகைகள் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவற்றில் சில மீன்கள், அதிக விஷத் தன்மை கொண்டவை. அவை மனிதனின் தேகத்தில் பட்டாலே உயிர் போகி விடும் என எச்சரிக்கின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரத்தில் அதிக அளவில் காணப்படும் ஜெல்லி மீன்கள் வகை ஒன்று, கரை வலை மீன் பிடிப்பவர்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வகை மீன்கள் மனிதர்கள் மேல் பட்டால் உயிர் போவது இல்லை. மாறாக உடல் ரீதியான பல பிரச்சனைகளை மீனவர்கள் சந்திக்க நேருகிறது.
இந்த ஜெல்லி மீன்கள், உடலில் பட்டால் அவர்களுக்கு உடனடியாக அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது, பின் சொறி, சிரங்கு, அதில் இருந்து ரத்தம் வடிதல், யானைக்கால், வாந்தி, மயக்கம் மற்றும் முதுகுவலி ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
ஓவ்வொரு நாளும் இப்படி பட்ட பிரச்சனையை கரை வலை மீன் பிடிப்பவர்கள் சந்திப்பதாக வேதனையோடு கூறுகிறார்கள்.