பிடித்து வந்த மீன்களை மீண்டும் கடலில் போடும் மீனவர்கள்!

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பதும் இன்று ஐந்தாவது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியா முழுவதும் மீனவர்கள் பிடித்து வந்த சுமார் ஒரு லட்சம் டன் மீன்கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக மீன் மார்க்கெட்டுகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டது.

மேலும் மீனை பாதுகாத்து வைக்க வேண்டிய ஐஸ் பேக்டரிகளும் உடனடியாக மூடப்பட்டுள்ளது. எந்தவிதமான போக்குவரத்தும் இல்லை என்பதால் மீன்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லவும் முடியவில்லை. இதனை அடுத்து மீன்களை பிடித்து வந்த மீனவர்கள் வேறு வழியின்றி மீண்டும் படகில் கடலுக்கு சென்று அந்த மீன்களை கடலில் தூக்கி வீசுகின்றனர். இது குறித்த வீடியோ ஒன்று சமூக வலைகளில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் அதிகமான நஷ்டம் அடைந்திருக்கும் மீனவர்களுக்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் அவருடைய வாழ்வாதாரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்றும் மீனவர்களின் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.