மனித பற்கள்....! வித்தியாசமான தோற்றுத்துடன் இருக்கும் ஆட்டுத்தலை மீன்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
வித்தியாசமான தோற்றம் மற்றும் மனித பற்களைக் கொண்ட மீன் ஒன்று அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு கரோலினாவில் உள்ள ஜென்னட் பியர் என்னும் மீன் பிடித்தளத்தில் இருந்து இந்த "ஆட்டுத்தலை மீன்" கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியானது முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
"இந்த மீனின் சிறப்பம்சம் என்னவென்றால், இவற்றின் கடைவாய்ப்பற்கள் இரையை கடித்து தின்னும் அளவிற்கு ஏதுவாகவும், வரிசையாகவும் அமைந்திருக்கும். இதன் வாயானது ஆட்டின் வாய்ப்போல் அமைத்திருப்பதால் தான், இதற்கு ஆட்டுத்தலை மீன் என்று பெயர் வந்துள்ளது.
அந்த மீன்பிடி தளத்திற்கு தினமும் செல்லும், நாதன் மார்டின் என்பவர் தான் இந்த மீனை முதன் முதலாக பார்த்துள்ளார். இதை கண்டிப்பாக தன்னால் பிடிக்க முடியும் என்று நம்பி, அந்த அதிசியமீனை பார்த்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் இந்த மீனை வேட்டையாடினால் நல்ல அற்புதமான சுவையுடன் இருக்கும் என்றும் செய்தித்தளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
#bigteethbigtimes என்ற ஹேஷ்டேக்குடன் ஷேர் செய்யப்பட்ட இந்த மீனின் புகைப்படம் அண்மையில் வைரலானது. இந்த மீனை பார்த்த நெட்டிசன்கள் பலரும் வேடிக்கையான கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout