முதல் முறையாக இணையும் அனிருத்-யுவன்ஷங்கர் ராஜா.. செம்ம வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,August 08 2023]

இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றி வருவதை பலமுறை பார்த்து வருகிறோம். ஒரு இசையமைப்பாளர் கம்போஸ் செய்த பாடலில் இன்னொரு இசையமைப்பாளர் பாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் அனிருத் இசையில் யுவன் சங்கர் ராஜா, யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் பாடி உள்ள நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு பாடலை கம்போஸ் செய்துள்ளனர்.

சரத்குமார், காஷ்மீரா, அமிதேஷ் நடிப்பில் உருவாகிய ’பரம்பொருள்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் தான் முதன்முதலாக யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இணைந்து ஒரு பாடலை உருவாக்கி உள்ளனர்.

‘அடியாத்தே’ என்ற இந்த பாடல் நாளை வெளியாக இருப்பதாக புரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

’பரம்பொருள்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வெளியாக இருப்பதாகவும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

More News

ஒரே ஒருவர் மட்டுமே நடித்த படம்.. ஆனாலும் பாட்டு, சண்டை உண்டு.. தமிழ் சினிமாவில் புதிய முயற்சி..!

 தமிழ் சினிமாவில் ஒரே ஒருவர் மட்டுமே நடித்த பார்த்திபன் நடித்த 'ஒத்த செருப்பு' என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அடுத்ததாக  'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்

சல்மான்கான் அடுத்த படத்தை இயக்கும் அஜித் பட இயக்குனர்.. படப்பிடிப்பு எப்போது?

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் அடுத்த படத்தை அஜித் படம் உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய தமிழ் இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

'ஜெயிலர்' ரிலீசுக்கு 2 நாட்கள் முன் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் வரும் பத்தாம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் ரிலீசுக்கு இரண்டு நாள் முன்பு ரஜினிகாந்த் இமயமலை செல்ல இருப்பதாக

ஒரே நாளில் மோதும் விஜய்-சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!

விஜய் நடித்து வரும் 'லியோ' மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'எஸ்கே 21' ஆகிய இரண்டு படங்களின் முக்கிய அப்டேட் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து இரு தரப்பு

தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குகிறதா பிரபல நடிகரின் படம்?

வரும் தீபாவளி அன்று சிவகார்த்திகேயன் நடித்த 'அயலான்' கார்த்தி நடித்த 'ஜப்பான்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான 'ஜிகர்தண்டா 2' ஆகிய மூன்று படங்கள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக