முதல் முறையாக இணையும் அனிருத்-யுவன்ஷங்கர் ராஜா.. செம்ம வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Tuesday,August 08 2023]

இன்றைய இளைய தலைமுறை இசையமைப்பாளர்கள் ஒருவருக்கொருவர் இணைந்து பணியாற்றி வருவதை பலமுறை பார்த்து வருகிறோம். ஒரு இசையமைப்பாளர் கம்போஸ் செய்த பாடலில் இன்னொரு இசையமைப்பாளர் பாடி வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.

அந்த வகையில் அனிருத் இசையில் யுவன் சங்கர் ராஜா, யுவன் சங்கர் ராஜா இசையில் அனிருத் பாடி உள்ள நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு பாடலை கம்போஸ் செய்துள்ளனர்.

சரத்குமார், காஷ்மீரா, அமிதேஷ் நடிப்பில் உருவாகிய ’பரம்பொருள்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடந்து வருகிறது. இந்த படத்தில் தான் முதன்முதலாக யுவன் சங்கர் ராஜா மற்றும் அனிருத் இணைந்து ஒரு பாடலை உருவாக்கி உள்ளனர்.

‘அடியாத்தே’ என்ற இந்த பாடல் நாளை வெளியாக இருப்பதாக புரோமோ வீடியோ வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

’பரம்பொருள்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வெளியாக இருப்பதாகவும் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.