முதல்முறையாக மினிமம் கியாரண்டி இல்லாமல் வெளிவரும் விஜய்யின் 'மாஸ்டர்' 

  • IndiaGlitz, [Sunday,April 26 2020]

தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் படப்பிடிப்பின்போதே கிட்டத்தட்ட அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே. சுமார் ரூ.200 கோடிக்கு இந்த படம் விற்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென கொரோனா காரணமாக திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் வெளியாகவில்லை

இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே எம்ஜி என்ற மினிமம் கியாரண்டி என்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் எம்ஜி முறையில் திரையிட முடியாது என்றும் டிஸ்ட்ரிபியூட்டர் முறையில் தான் இந்த படம் வெளியிட முடியும் என்றும் போர்க்கொடி தூக்க தொடங்கிவிட்டனர்.

எம்ஜி முறை என்றால் லாபம், நஷ்டம் இரண்டில் எதுவென்றாலும் அது விநியோகிஸ்தரையே சாரும். ஆனால் டிஸ்டிரிபியூட்டர் முறை என்றால் நஷ்டம், லாபம் எது ஏற்பட்டாலும் அதற்கு தயாரிப்பாளர் தான் பொறுப்பேற்க வேண்டும்

இந்த நிலையில் அதிரடி முடிவெடுத்த தளபதி விஜய், ‘மாஸ்டர்’ படத்தை டிஸ்ட்ரிபியூட்டர் முறைக்கு விற்பனை செய்ய சம்மதித்ததாகவும், ஒருவேளை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதனை தான் ஏற்று கொள்வதாகவும் நம்பிக்கை கொடுத்துள்ளார். இதனையடுத்து முதல்முறையாக விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் டிஸ்ட்ரிபியூட்டர் முறையில் வெளியாகவுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே விஜய் இந்த உறுதி மொழியை கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

More News

தமிழகத்தில் இன்று கொரோனா பாசிட்டிவ் எத்தனை பேருக்கு? சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும், சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஜோதிகா அப்படி என்ன தவறாக கூறினார்? பிரபல நடிகை கேள்வி

சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெட்டிசன்கள் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

உண்மையில் என்ன நடந்தது? கொரோனா பாதிப்பில் இருந்து குணமான பாடகி கனிகா கபூர்

மும்பையை சேர்ந்த பிரபல பாடகி கனிகா கபூர், இங்கிலாந்து நாட்டில் இருந்து திரும்பி வந்தபோது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தப்பிவிட்டதாகவும்,

3 ஆண்டுகள் வரை சிறை: தமிழக அரசின் அவசர சட்டத்தால் பரபரப்பு

சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவர் சைமன் கொரோனா தொற்றால் உயிரிழந்ததை அடுத்து அவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் பொதுமக்கள் போராட்டம் நடத்தியதால்

சூர்யா-ஜோதிகா விவகாரத்தில் தலையிடும் தமிழக அரசு!

கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனை அடுத்து திரைக்கு வெளியிட தயாராக இருக்கும்