முதல்முறையாக மினிமம் கியாரண்டி இல்லாமல் வெளிவரும் விஜய்யின் 'மாஸ்டர்'
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் படப்பிடிப்பின்போதே கிட்டத்தட்ட அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே. சுமார் ரூ.200 கோடிக்கு இந்த படம் விற்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் திடீரென கொரோனா காரணமாக திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி இந்த படம் வெளியாகவில்லை
இந்த நிலையில் இந்த படம் ஏற்கனவே எம்ஜி என்ற மினிமம் கியாரண்டி என்ற முறையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த படத்தை வாங்கிய விநியோகிஸ்தர்கள் எம்ஜி முறையில் திரையிட முடியாது என்றும் டிஸ்ட்ரிபியூட்டர் முறையில் தான் இந்த படம் வெளியிட முடியும் என்றும் போர்க்கொடி தூக்க தொடங்கிவிட்டனர்.
எம்ஜி முறை என்றால் லாபம், நஷ்டம் இரண்டில் எதுவென்றாலும் அது விநியோகிஸ்தரையே சாரும். ஆனால் டிஸ்டிரிபியூட்டர் முறை என்றால் நஷ்டம், லாபம் எது ஏற்பட்டாலும் அதற்கு தயாரிப்பாளர் தான் பொறுப்பேற்க வேண்டும்
இந்த நிலையில் அதிரடி முடிவெடுத்த தளபதி விஜய், ‘மாஸ்டர்’ படத்தை டிஸ்ட்ரிபியூட்டர் முறைக்கு விற்பனை செய்ய சம்மதித்ததாகவும், ஒருவேளை தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அதனை தான் ஏற்று கொள்வதாகவும் நம்பிக்கை கொடுத்துள்ளார். இதனையடுத்து முதல்முறையாக விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் டிஸ்ட்ரிபியூட்டர் முறையில் வெளியாகவுள்ளது. ‘மாஸ்டர்’ படத்தின் மீதுள்ள நம்பிக்கை காரணமாகவே விஜய் இந்த உறுதி மொழியை கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout