முதல்முறையாக சிவகார்த்திகேயன் படம் செய்த சாதனை!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகை பொறுத்தவரை ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆகிய மாஸ் நடிகர்களின் படங்கள் மட்டுமே 100 கோடி கிளப்பில் இணைந்து உள்ள நிலையில் முதல் முறையாக சிவகார்த்திகேயன் படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பதும் இந்தப் படம் உலகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு 90 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’டாக்டர்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் சற்றுமுன் ’டாக்டர்’ திரைப்படம் 25 நாட்களில் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ’டாக்டர்’ திரைப்படத்திற்கு ஆதரவு தந்த ரசிகர்கள் மற்றும் அனைவருக்கும் தங்களது நன்றி என்றும் தெரிவித்துள்ளது.
இதனை அடுத்து முதல் முறையாக ’டாக்டர்’ திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பெருமையான செய்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் திரைப்படம் தான் அவரது படங்களில் அதிக வசூல் செய்த படம் என்றும் அந்த படம் ரூபாய் 88 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டது.
சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், வினய் உள்பட பலரது நடிப்பில் அனிருத் இசையில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’டாக்டர்’ திரைப்படத்தின் மிகப் பெரிய வெற்றி திரைஉலகில் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் வெற்றியால் நெல்சன் திலீப்குமாரின் அடுத்த படமான தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்திற்கு பல மடங்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Entering the 25th Day with a bang! Your favourite entertainer #DOCTOR joins the 100 crore club??
— KJR Studios (@kjr_studios) November 2, 2021
Thank you for the overwhelming support and love. You made this happen ♥️ #DOCTORHits100Crs #MegaBlockBusterDOCTOR @Siva_Kartikeyan @Nelsondilpkumar @anirudhofficial @SKProdOffl pic.twitter.com/pj2wkTkm7G
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com