முதல்முறையாக இணையும் பிரபுதேவா-விஜய் சேதுபதி.. மாஸ் தகவல்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பல மாஸ் நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பது தெரிந்ததே. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’பேட்ட’ தளபதி விஜய் உடன் ’மாஸ்டர்’ உலகநாயகன் கமல்ஹாசன் உடன் ’விக்ரம்’ ஷாருக்கானுடன் ’ஜவான்’ ஆகிய படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது முதல் முறையாக பிரபுதேவா படத்தில் அவர் இணைந்துள்ள செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபு தேவாவின் 60-வது படமான 'வுல்ஃப்’ என்ற படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளையும் படக்குழுவினர் அவ்வப்போது செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த பாடலை விஜய் சேதுபதி பாடியுள்ளார் என்பது தான் ஆச்சரியமான தகவல். பிரபுதேவா படத்தில் விஜய் சேதுபதி பாடி உள்ள நிலையில் இந்த பாடலை இசையமைப்பாளர் அம்பரீஷ் கம்போஸ் செய்துள்ளார்.
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், திகில் காட்சிகள் சஸ்பென்ஸ் ஆகியவை கொண்ட 'வுல்ஃப்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி உள்ளது. பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா, ரமேஷ் திலக், அஞ்சு குரியன், ஸ்ரீ கோபிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள் இந்த படம் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் கிஷோர் படத்தொகுப்பு பணியில் உருவாகி உள்ளது.
Super Exciting Announcement ⚡@PDdancing 's #WOLF 🐺 First Single #SingleMaaltuGumbalu Promo From Tomorrow @ 11 AM
— Nikil Murukan (@onlynikil) August 12, 2023
Sung by Makkal Selvan @VijaySethuOffl 🎤
A @amrishofficial Musical 🎼@SandeshPro @vinoovenketesh @ImSimhaa @iamlakshmirai @anusuyakhasba @AnjuKurian10… pic.twitter.com/tso16EbPiT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com