பிக்பாஸ் வீட்டில் மீண்டும் பணப்பெட்டி.. கதிரவனை அடுத்து யார்?

  • IndiaGlitz, [Wednesday,January 18 2023]

ஒவ்வொரு சீசனிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் கடைசி வாரத்தில் பணப்பெட்டி அறிமுகம் செய்யப்படும் என்றும் அந்த பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ஒரு போட்டியாளர் வெளியேறுவார் என்பது தெரிந்ததே.

கடந்த சீசன்களில் கவின், கேப்ரில்லா, சிபி சக்கரவர்த்தி ஆகியோர் பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறிய நிலையில் நேற்று அறிமுகம் செய்யப்பட்ட பணமூட்டையில் இருந்த மூன்று லட்ச ரூபாயை எடுத்துக் கொண்டு கதிரவன் வெளியேறினார் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் பிக்பாஸ் வரலாற்றில் முதல்முறையாக இரண்டாவது முறையாக பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. சற்றுமுன் வெளியான வீடியோவில் மூன்று லட்ச ரூபாய் மதிப்புள்ள பணப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இந்த பணப்பெட்டியின் மதிப்பு ஒவ்வொரு நிமிடமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்றும் இந்த பணப்பெட்டியை தற்போது இருக்கும் ஐந்து இறுதி போட்டியாளர்களின் ஒருவர் எடுத்துக் கொண்டு செல்லலாம் என்றும் பிக் பாஸ் அறிவிக்கின்றார்.

இதனை அடுத்து ஷிவின், விக்ரமன், அசீம், மைனா மற்றும் அமுதவாணன் ஆகிய ஐந்து போட்டியாளர்களில் யார் இந்த பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு செல்வார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

கடைசி நேரத்தில் ராபர்ட்  இடம் தெளிவாக விளக்கிய ரக்சிதா..!

பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் தற்போது ஒன்றிணைந்துள்ளனர் என்பதும் ஒருவருக்கொருவர்

'துணிவு' வெற்றிக்கு பின் மஞ்சுவாரியர் செய்த முதல் வேலை இதுதான்.. வைரல் புகைப்படம்

 அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது என்பதும் 200 கோடி ரூபாய் என்று மைல்கல்லை

'தளபதி 67' படம் குறித்த சூப்பர் தகவலை தயாரிப்பாளர் லலித்!

தளபதி விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படம் ஒரு பக்கம் ரூ.200 கோடி என வசூலை வாரி குவித்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் அவர் நடித்து வரும் 67 வது படமான 'தளபதி 67 ' படத்தின் ஆச்சரியமான தகவல்கள்

வெங்கட்பிரபுவின் அடுத்த படம்... நாயகி கேரக்டரின் போஸ்டர் வைரல்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் அடுத்த படத்தின் நாயகியாக நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி கேரக்டர் பெயர் குறித்த போஸ்டர் வெளியாகி உள்ளது. 

தனலட்சுமி குறித்து விக்ரமன்: ஆனால் தனா என்ன செய்றார் பாருங்க..

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனலட்சுமி குறித்து விக்ரமன் பெருமையாக கூறும் நிலையில் விக்ரமனை பற்றி அவதூறாய் ஜிபி முத்து பேசும்போது தனலட்சுமி அதை ஆமோதிப்பது போல் சிரித்து இருப்பது