பாலிவுட் பிரபலத்துடன் முதல்முறையாக இணையும் மாதவன்.. இயக்குனர் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Sunday,May 14 2023]

பிரபல பாலிவுட் நடிகருடன் இணைந்து நடிகர் மாதவன் முதல் முறையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மாதவன் நடிப்பில் உருவான ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தற்போது அவர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் ஒரு திரைப்படம், நயன்தாராவுடன் ’தி டெஸ்ட்’ மற்றும் ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படம் என மூன்று தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க இருக்கும் திரைப்படத்தில் அவருடன் இணைந்து மாதவன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. சூப்பர் த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்க இருப்பதாகவும் மும்பை, லண்டன் உள்பட பல பகுதிகளில் இந்த படத்தை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் முறையாக மாதவன் மற்றும் அஜய் தேவ்கான் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தை பாலிவுட் பிரபல இயக்குனர் விகாஸ் என்பவர் இயக்க உள்ளார். இவர் கங்கனா ரனாவத் நடித்த ’குயின்’ உள்பட பல வெற்றி படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அன்னையர் தினத்தில் அப்பாவுக்கு வாழ்த்து.. அரசியலுக்கு வருவது உறுதி.. பிரபல நடிகர் மகளின் பதிவு..!

உலகம் முழுவதும் இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள் மற்றும் பலர் அன்னையர் தின வாழ்த்துக்களை சமூகவலைத்தளத்தில் தெரிவித்து

அரசியல்வாதியை மணக்கிறார் பிரியங்கா சோப்ரா சகோதரி.. நிச்சயதார்த்த புகைப்படங்கள்..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரியும் நடிகையுமான பரினீதி சோப்ராவின் திருமண நிச்சயதார்த்தம் சமீபத்தில் நடந்த நிலையில் அது குறித்து புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

விஷாலின் 'மார்க் ஆண்டனி': படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!

விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த சில மாதங்களாக உருவாகி வந்த 'மார்க் ஆண்டனி' என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரிலீஸ் தேதியும் உடனே

'வாத்தி' இயக்குனரின் அடுத்த படத்தின் ஹீரோ இந்த பிரபலம் தான்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனுஷ் நடித்த 'வாத்தி' என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது என்பதும் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. 

ஆர்யாவின் 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' ரிலீஸ் தேதி.. அதே நாளில் ரிலீஸாகும் இன்னொரு படம்..!

ஆர்யா நடித்த 'காதர்பாட்ஷா என்ற முத்துராமலிங்கம்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக செய்திகள் வெளியானது.