முதல்முறையாக கதை கேட்காமலேயே நடிக்க மறுத்தேன்: லட்சுமி ராமகிருஷ்ணன்

  • IndiaGlitz, [Wednesday,September 02 2020]

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, மற்றும் ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களை இயக்கியவரும் ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவருமான லட்சுமி ராமகிருஷ்ணன் முதல் முதலாக ஒரு தமிழ் படத்தில் கதை கேட்காமலேயே நடிக்க மறுத்ததாக தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் முறையாக கதை கேட்காமலேயே ஒரு திரைப்படத்தில் நடிக்க மறுத்தேன். ஏனெனில் ஏற்கனவே ஒரு தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன். அதுமட்டுமின்றி நான் இயக்க இருக்கும் அடுத்த படத்தின் பணியையும் விரைவில் ஆரம்பிக்க உள்ளேன். எனவே இந்த தமிழ் திரைப்படத்தில் நான் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. இருப்பினும் அந்த கேரக்டர் என்னை விட திறமையான ஒரு நடிகைக்கு செல்லும் என்று நான் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவுள்ள அடுத்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு அவர் இயக்கிய ’ஹவுஸ் ஓனர்’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் இந்த திரைப்படத்தில் கிஷோர் மற்றும் ஸ்ரீரஞ்சனி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

அனுமதியின்றி யூடியூபில் வெளியான திரைப்படம்: முன்னாள் முதல்வரின் மனைவி புகார்!

பிரபல இயக்குனர் ஜனநாதன் இயக்கிய 'இயற்கை' உள்ளிட்ட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான கன்னட படங்களிலும் நடித்தவர் நடிகை ராதிகா. குட்டி ராதிகா என்று அழைக்கப்பட்ட இவர் முன்னாள் கர்நாடக முதல்வர் குமாரசாமி

'குட்டி லவ் ஸ்டோரி'யில் இணையும் 4 முன்னணி இயக்குனர்கள்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் திறக்கப்படாததால் திரை உலகமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. இருப்பினும் ஓடிடி பிளாட்பாரம்

பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிக்கு தடை: மத்திய அரசு மீண்டும் அதிரடி

இந்தியா மற்றும் சீனா நாடுகளின் எல்லையில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் சமீபத்தில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் மோதிக்கொண்டதில்

மனைவியிடம் போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்த டாக்டர்!

மனைவியிடம் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போனில் தகவல் தெரிவித்துவிட்டு 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட டாக்டர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

பவன் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்: மேலும் 5 ரசிகர்கள் பலி

பிரபல தெலுங்கு நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அவரது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.