முதல்முறையாக இணைந்த ரஜினி-அஜீத்?

  • IndiaGlitz, [Saturday,September 19 2015]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'கபாலி' படத்தின் படப்பிடிப்பு கடந்த விநாயகர் சதூர்த்தி தினத்தில் பூஜையுடன் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். மலேசியாவில் வாழும் வயதான 'டான்' ஆக ரஜினி நடிக்கவுள்ள இந்த படத்தில் அவருக்கு மனைவியாக ராதிகே ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மோகன் ஸ்டுடியோவில் மலேசியா போன்ற பிரமாண்டமான செட் போட்டு அதில் நடந்து வருகிறது. முதல் நாளில் ரஜினி, கலையரசன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதே மோகன் ஸ்டுடியோவில், ரஜினி பட செட் போடப்பட்ட அடுத்த பகுதியில் அஜீத் நடிக்கும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பும் நடைபெறுகிறது. அஜீத், லட்சுமிமேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் அந்த பகுதியில் படமாக்கப்பட்டு வருவதாகவும், ரஜினி, அஜீத் ஆகியோர்களின் படப்பிடிப்புகள் ஒரே நேரத்தில் அருகருகே நடப்பது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது.