முதல்முறையாக 2500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு: உயிர்ப்பலியும் 50ஐ தாண்டியதால் பரபரப்பு

  • IndiaGlitz, [Sunday,June 21 2020]

தமிழகத்தில் கடந்த 4 நாட்களாக கொரோனா வைரஸின் பாதிப்பு தினமும் இரண்டாயிரத்தை தாண்டி வரும் நிலையில் இன்று 5வது நாளாக 2000ஐ தாண்டியது மட்டுமின்றி முதல்முறையாக 2500ஐ தாண்டியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழக சுகாதாரத்துறையின் தகவலின்படி தமிழகத்தில் இன்று 2532 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59,337 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் இன்று கொரோனா தொற்றால் 1,493 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41,172 ஆக உயர்வு என்றும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இன்று கொரோனாவால் 53 பேர் மரணம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 757 ஆக அதிகரித்துள்ளது என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி ஆகும்.

மேலும் தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,438 பேர் குணமடைந்துள்ளனர் என்பது தான் ஒரே ஆறுதல் என்பதும், இதனையடுத்து 32,754பேர் மொத்தம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழகத்தில் 31,401 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், இதனையடுத்து தமிழகத்தில் மொத்தம் 892,612 பேர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

More News

'வாத்தி கம்மிங்' பாடல் பின்னணியுடன் ஒர்க்-அவுட் செய்யும் பிரபல தமிழ் ஹீரோ

தமிழ் சினிமாவின் இளைய தலைமுறை ஹீரோக்களில் ஒருவர் விஷ்ணு விஷால். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்'

சீன தாக்குதல் விவகாரம்: பிரதமர் மோடிக்கு கமல்ஹாசன் கேட்ட 3 கேள்விகள்

இந்தியா மற்றும் சீன எல்லையில் சமீபத்தில் நடந்த இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் 2 ஆயிரத்தை தாண்டி வரும் நிலையில் பொதுமக்கள் மட்டுமின்றி பிரபலங்களும் கொரோனா வைரஸால்

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு விஜய் ரசிகர்கள் செய்த உதவி!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய சீன எல்லையான லடாக் பகுதியில் உள்ள கால்வான் என்ற பள்ளத்தாக்கில் சீன நாட்டின் ராணுவ வீரர்கள் திடீரென அத்துமீறி நுழைந்தனர்.

தந்தையர் தினத்தில் தந்தைக்கு முடிவெட்டிய சூப்பர் ஸ்டாரின் மகள்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ஆம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தந்தையர் தினமான இன்றும் பலர் தங்களுடைய தந்தைக்கு மரியாதை செலுத்தும்