முதல்முறையாக பிகினி போஸ் கொடுத்த அஜித் பட நடிகை.. குவியும் லைக்ஸ்..!

  • IndiaGlitz, [Tuesday,September 03 2024]

அஜித் உள்பட பல பிரபலங்களின் படங்களில் நடித்த நடிகை திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’காற்று வெளியிடை’ என்ற திரைப்படத்தில் கிரிஜா கபூர் என்ற சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் நடிகை சாரதா கபூர். அதன் பிறகு ’இவன் தந்திரம்’ ’விக்ரம் வேதா’ ’ரிச்சி’ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த நிலையில் ’கே 13’ ’மாறா’ ’சக்ரா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். குறிப்பாக அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் மீரா கிருஷ்ணன் என்ற கேரக்டரில் இவர் நடித்ததை அடுத்து அந்த கேரக்டருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் சாரதா ஸ்ரீநாத்துக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் தாய்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்தார். அங்கு அவர் பிகினி உடையில் இருப்பது உள்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் கிடைத்துள்ளது.

குறிப்பாக முதல் முறையாக சாரதா ஸ்ரீநாத் பிகினி புகைப்படங்களை பதிவு செய்திருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.