ஆரி, சனம் குறித்து முதல்முறையாக மனம்திறந்த அனிதாவின் கருத்துக்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் கிட்டத்தட்ட அனைவருமே ஆரியுடன் சண்டை போட்டதால் தான் வெளியேற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் ஆரியுடன் அதிகபட்ச ஆத்திரத்துடன் பேசிய அனிதாவும் அதனால்தான் வெளியேற்றப்பட்டதாக கூறப்பட்டது
இந்த நிலையில் ஆரி மற்றும் சனம்ஷெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் தனது இருந்த நட்பு மற்றும் உறவு குறித்து அனிதா முதல்முறையாக மனம் திறந்து சில கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளர.
நான், ஆரி, சனம் ஆகிய மூவரும் உண்மையான நண்பர்களாக பிக்பாஸ் வீட்டில் இருந்தோம். பிக்பாஸ் வீட்டில் நாங்கள் ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்ட மகிழ்ச்சியான தருணங்களை மறக்கவே முடியாது. கோபமோ சண்டையோ மூஞ்சிக்கு நேராகவே சொல்லிவிடுவோம். அதுதான் எங்களின் பலம்
பிக்பாஸ் என்பது ஒரு விளையாட்டு. இதில் மன அழுத்தம் காரணமாக ஒரு சில தவறுகள் செய்வது வழக்கம் தான். இருந்தாலும் நாங்கள் ஏமோஷனல் உடன் விளையாடி ஒரு சில நேரங்களில் எங்களுடைய மனநிலையையும் இழந்துள்ளோம். நானும் அந்த வீட்டில் ஒரு சில தவறுகள் செய்திருக்கிறேன் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் நான் சண்டை போட்டது மட்டுமே அதிகமாக மக்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. நானும் ஆரியிடம் சமாதானம் செய்தது, ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி கொண்டது, வருத்தங்களை பரிமாறிக் கொண்டது, விளையாட்டாக செய்த பல விஷயங்கள் மக்களுக்கு காண்பிக்கப்படவில்லை ஆனால் அதே நேரத்தில் எங்கள் மூவருக்கும் உள்ள உறவு மற்றும் நட்பு எங்கள் மூவருக்கும் மட்டுமே தெரிந்த ஒரு உண்மையாகும். பிக்பாஸ் வீட்டில் எனக்கு கிடைத்த மிகப்பெரிய நட்பு வட்டாரம் ஆரி மற்றும் சனம் என்று அனிதா தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments