'காலா'வின் கதையை லீக் செய்த அமெரிக்க தியேட்டர்

  • IndiaGlitz, [Saturday,June 02 2018]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படம் வரும் வெள்ளியன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் இந்த படம் இதுவரை இல்லாத வகையில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை திரையிடும் அமெரிக்கா திரையரங்குகளில் ஒன்றான 'சினிமார்க்' என்ற திரையரங்கத்தின் சமூக வலைத்தள பக்கத்தில் 'காலா' படத்தின் கதைச்சுருக்கம் வெளியாகியுள்ளது. திருநெல்வேலியில் இருந்து சிறுவயதில் மும்பைக்கு செல்லும் காலா, அங்குள்ள தாராவி என்ற ஸ்லம் பகுதியில் டானாக மாறி அப்பகுதி மக்களுக்காக கேங்ஸ்டராக மாறி போராடும் காலா திரைப்படத்தை காண வாருங்கள் என்று டுவீட் செய்துள்ளது.

ஒரு இந்திய திரைப்படத்திற்காக ஒரு அமெரிக்க தியேட்டரின் சமூகக வலைத்தள பக்கத்தில் டுவீட் வெளியாவது இதுதான் முதல்முறை என்றும், சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்ததால் இந்த பெருமை கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.