தனுஷ் பிறந்த நாளில் 'ஜகமே தந்திரம்' விருந்து: கார்த்திக் சுப்புராஜ் அறிவிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள ’ஜகமே தந்திரம்’ என்ற திரைப்படத்தின் ஆச்சரிய அறிவிப்பு இன்று காலை 9 மணிக்கு வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் தெரிவித்திருந்த தகவல் குறித்த செய்தியை நேற்று பார்த்தோம்.
இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ‘ஜகமே தந்திரம்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளார். ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷ் பிறந்த நாளில் அவரது ரசிகர்களுக்கு இந்த சிங்கிள் இசை விருந்து கிடைக்கவுள்ளது.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கம்போஸ் செய்த இந்த சிங்கிள் பாடல் ‘ரக்கிட ரக்கிட ரக்கிட’ என்று தொடங்குவதாகவும், இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அடுத்து தனுஷ் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.
தனுஷ், சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லட்சுமி, ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகி உள்ளது.
First single 'Rakita Rakita Rakita' from D's Day - July 28th ??
— karthik subbaraj (@karthiksubbaraj) July 1, 2020
Time to Sing #Rakitaரகிடరకిట@dhanushkraja @sash041075 @StudiosYNot @Music_Santhosh @Lyricist_Vivek @kshreyaas @vivekharshan #JagameThandhiram #JagameTantram #JT #DhanushBdayMonthBegins pic.twitter.com/xuJtWmO8z9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments