ஹிப் ஹாப் தமிழா ஆதியின் 'நட்பே துணை' புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Tuesday,December 11 2018]

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கிய 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் வெற்றிக்கு பின் அவர் நடித்து இசையமைத்து வரும் திரைப்படம் 'நட்பே துணை'. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'கேரளா சாங்' என்ற பாடல் டிசம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த தகவலை ஹிப் ஹாப் தமிழா தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

ஆதி, அனக்யா, கரு பழனியப்பன், ஹரிஷ் உத்தமன், 'எருமைச்சாணி' விஜய் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை குஷ்புவின் அவ்னி மூவீஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. அரவிந்த்சிங் ஒளிப்பதிவில் ஃபென்னி ஒலிவர் படத்தொகுப்பில் வளர்ந்து வரும் இந்த படத்தை பார்த்திபன் தேசிங்கு என்பவர் இயக்கி வருகிறார்.