முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த விஜய்சேதுபதி படக்குழு!

  • IndiaGlitz, [Saturday,March 23 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கும் படங்களின் படப்பிடிப்புகள் தொடங்குவது முடிவதும் மின்னல் வேகத்தில் நடக்கும் என்பது தெரிந்ததே! வருடக்கணக்கில் மெகா படங்களை எடுத்து கொண்டிருக்கும் படக்குழுவினர் மத்தியில் விஜய்சேதுபதியின் படக்குழு மட்டும் அதிகபட்சம் மூன்று மாதங்களில் படத்தை முடித்து ரிலீசுக்கு தயாராகிவிடுவார்கள்.

அந்த வகையில் விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்து வந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது. இதில் விஜய்சேதுபதி, ராஷிகண்ணா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ளன. அடுத்தகட்ட படப்பிடிப்பில் விஜய்சேதுபதியுடன் இந்த படத்தின் இன்னொரு நாயகியான நிவேதா பேத்ராஜ் இணையவுள்ளார்.

விஜயா புரடொக்சன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு இளம் இரட்டையர்களான விவேக் சிவா-மெர்வின் சாலமன் இசையமைக்கவுள்ளனர். இந்த இரட்டையர்கள் ஏற்கனவே 'வடகறி', 'புகழ்', 'குலேபகாவலி', 'மோகினி' போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவான ''சூப்பர் டீலக்ஸ் திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது. மேலும் அவர் நடித்து முடித்துள்ள 'மாமனிதன்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. அதுமட்டுமின்றி 'சிந்துபாத்', 'சயிர நரசிம்மரெட்டி', போன்ற படங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
 

More News

விராத் கோஹ்லி - சுரேஷ் ரெய்னா: முதல் ஐந்தாயிரம் யாருக்கு?

ஐபிஎல் திருவிழா இன்று முதல் சென்னையில் தொடங்கவுள்ள நிலையில் இன்றைய முதல் போட்டி தல தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் விராத் கோஹ்லியின் பெங்களூரு அணிக்கும் இடையே நடைபெறவுள்ளது

காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு! சிவகங்கை மட்டும் சஸ்பென்ஸ் ஏன்?

அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து, வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்திற்கும் கிளம்பிவிட்ட நிலையில்

சூர்யாவின் 'என்.ஜி.கே' முக்கிய அப்டேட்!

சூர்யா நடிப்பில் செல்வராகவன் இயக்கி வரும் 'என்.ஜி.கே' திரைப்படம் கடந்த ஆண்டே வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் இந்த படம் பல்வேறு காரணங்களால் தாமதமாகி கொண்டே வருகிறது.

ஜெயலலிதா கேரக்டருக்கு தேசிய விருது பெற்ற நடிகை!

பிரபல இயக்குனர் ஏ.எல்.விஜய், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்திற்கு 'தலைவி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

பிரபல அரசியல் கட்சியில் இணைந்த டான்ஸ் மாஸ்டர் கலா!

கடந்த சில நாட்களாக கோலிவுட் நட்சத்திரங்கள் பலர் அரசியல் கட்சியில் இணைந்து வருவதை பார்த்து கொண்டுதான் இருக்கின்றோம்.