கொரோனா தடுப்பு மருந்து.. தன்னிடம் சோதிக்க அனுமதித்த அமெரிக்க பெண்மணி..!
- IndiaGlitz, [Wednesday,March 18 2020]
உலகம் முழுக்க பரவி வரும் கொரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்துகள் உருவாக்கி அதை மனிதர்களிடம் சோதித்து பார்ப்பதை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இந்த வைரஸிற்கு இப்போதைக்கு மருந்துகள் ஏதும் இல்லாத காரணத்தால் அதன் நோய் தொற்று அறிகுறிகளுக்கு கொடுக்கப்படும் மருந்துகளே நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வருகின்றன.
மனிதர்களுக்குள் செலுத்தி சோதிக்கப்படும் இந்த மருந்தானது வைரஸ் தொற்றை உருவாக்காது. ஆய்வாளர்கள் வைரஸின் ஆர்.என்.ஏவை பிரதியெடுத்து இந்த புதிய தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளனர். இது மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தாது என் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது வைரசை குணப்படுத்துமா என்பதை அறிய இன்னும் சில மாதங்கள் ஆகும்.
அமெரிக்காவை போல பல நாடுகளும் இதே போல வைரஸினை குணப்படுத்த மருந்துகளை உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக கியூபா நாட்டில் 21 தடுப்பு மருந்துகள் உருவாக்கப்பட்டு மக்களை குணப்படுத்தி வருவதாக செய்திகள் வருகின்றன. சமீபத்தில் எங்குமே நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஐரோப்பிய கப்பலை கியூபா தங்கள் நாட்டுக்குள் அனுமதித்து, அதிலிருந்த பயணிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. இவ்வளவிற்கும் அமெரிக்காவானது கியூபா மீது பொருளாதார தடை விதித்துள்ளது.
அமெரிக்காவின் மாடர்னா தெரபெடிக்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள இந்த தடுப்பு மருந்தானது தன்னார்வலர்களுக்கு செலுத்தப்பட்டு சோதிக்கப்பட்டு வருகிறது. முதன் முதலில் இந்த மருந்தினை தன் உடலுக்குள் செலுத்திக் கொண்ட சியாச்சினை சேர்ந்த 2 குழந்தைகளுக்கு தாயான 43 வயது ஜெனிஃபார் ஹால்லர் கூறும் போது கொரோனாவிற்கு எதிராக, அதை தடுக்க என்னால் முடிந்த உதவியை செய்துள்ளேன் என்று கூறினார்.
இந்த தடுப்பூசி அதி உயர் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்படி இந்த தடுப்பு மருந்து மனிதர்களுக்குப் பாதுகாப்பானது. இந்த தடுப்பு மருந்தினால் சோதனை நடத்தப்பட்டவர்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். உண்மையில் மிக வேகமாக இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஏனெனில் இது வைரஸுக்கு எதிரான ஒரு பந்தயம். மற்ற ஆராய்ச்சியாளர்களுக்கு இடையிலான பந்தயம் கிடையாது. மேலும் இது மனிதக்குலத்திற்குப் பலன் அளிப்பதற்காகவே நடத்தப்படுகிறது என லண்டன் இம்பீரியல் கல்லூரியின் தொற்று நோய் நிபுணரான ஜான் ட்ரோகோனிங் தெரிவித்துள்ளார்.
பொதுவாக தட்டம்மை போன்ற வைரஸ்களுக்கான தடுப்பு மருந்து, பலவீனமடைந்த அல்லது கொல்லப்பட்ட வைரஸ்களின் மூலம் உருவாக்கப்படும். ஆனால் கோவிட்-19 தொற்றை ஏற்படுத்தும் வைரஸ் மூலம் mRNA-1273 என்ற இந்த தடுப்பு மருந்து உருவாக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக, விஞ்ஞானிகளால் ஆய்வகத்தில் உருவாக்க முடிந்த, கோவிட் வைரஸிலிருந்து நகலெடுக்கப்பட்ட மரபணு குறியீட்டின் ஒரு சிறிய பகுதியை இது உள்ளடக்கியுள்ளது. உண்மையான தொற்றை எதிர்த்து போராடும் அளவுக்கு மனித நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கு இந்த தடுப்பு மருந்து உந்துதல் அளிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
Experimental COVID-19 vaccine test begins as U.S. volunteer receives first shot https://t.co/xpBVudj30u pic.twitter.com/KSAfOSEEOv
— TIME (@TIME) March 16, 2020