கருப்பு, வெள்ளை, மஞ்சள் உள்ளிட்ட மூன்று பூஞ்சை தொற்றுக்கள் பாதித்த நபர்...! அதிர்ந்துபோன மருத்துவர்கள்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும், கடுமையான நடவடிக்கைகளை எடுத்தும் வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கமே இன்னும் முடிவடையாத நிலையில் கருப்பு,வெள்ளை மற்றும் மஞ்சள் உள்ளிட்ட பூஞ்சை தொற்றுக்கள் மக்களை கொன்று குவித்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனிடையே கொரோனாவால் குணமடைந்தவர்களில் ஒரு சிலருக்கு கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை உள்ளிட்ட தொற்று பாதிப்புகள் ஏற்படத்துவங்கின. தற்போது வடமாநிலங்களில், கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதைத்தொடர்ந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மஞ்சள் பூஞ்சை என்ற புதிய தொற்று உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை முடிந்தபின், சில நாட்கள் கழித்து இந்த பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படுவதாகவும், வீடுகளில் உள்ள சுகாதாரமற்ற முறையே மஞ்சள் பூஞ்சை தொற்று ஏற்பட காரணம் என்றும் மருத்துவ ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்நிலையில் உத்திரப்பிரதேசத மாநிலத்தில், சஞ்சய் நகரைச் சேர்ந்த 45 வயதுடைய நபருக்கு முதன் முதலாக கருப்பு, மஞ்சள், வெள்ளை உள்ளிட்ட மூன்று பூஞ்சை தொற்று பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. தற்போது அவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் எந்த பூஞ்சை தொற்று ஏற்பட்டாலும், ஆரம்ப காலத்திலேயே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். இதற்கு காரணம் இந்த தொற்றுக்கள் உயிரை மாய்க்கும் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை ஆகும். இந்த மூன்று பூஞ்சை தொற்றுக்களுக்கும் மக்கள் அம்போட்டெரிசின்- பி
என்ற மருந்தை பரிந்துரை செய்கிறார்கள்.
கருப்பு பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்:
கோவிட் தொற்று ஏற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு, சர்க்கரை அளவில் கட்டுப்பாடு இல்லாதபோது கருப்பு பூஞ்சை நோய் எளிதில் தொற்றிக்கொள்கிறது.கொரோனாவிலிருந்து குணமடைந்து, சிகிச்சை பெறும் குறிப்பிட்ட சில நபர்களுக்கு இந்நோய் பாதிப்பு ஏற்படுகிறது.ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைபவர்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போதும் இந்த குறைபாடு ஏற்படுகிறது. கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்கள், அதிக மருந்துகள் எடுத்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இவர்கள் தீவிர சிகிச்சை எடுத்துவருவதால், கணையத்தில் பாதிப்பும், ரத்தத்தில் சர்க்கரையின் அளவும் அதிகமாக இருக்கும். இக்காரணங்களால் கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுகிறது.
1.கண்களும், சுற்றியுள்ள பகுதிகளில் வலி ஏற்படும், கண்கள் சிவந்து காணப்படும்
2.முகத்தில் தொடர்ந்து வலி ஏற்படும்
3.கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில், நிறம் மாறுவது
4.திடீரென பார்வை இழத்தல்
5.கண்கள் வீக்கமடைந்து காணப்படும்
6. கருவிழிகள் துருத்திக்கொண்டே இருக்கும்
7. கருவிழிகள் அசையாமல் இருக்கும்
8. கண் தசைகளுக்கு வலுவு தரக்கூடிய நரம்புகளில் செயலிழப்பு ஏற்படும்.
9. கருப்பு நிறத்தில் புண் ஏற்படும்
10.மூக்கடைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து ஏற்படும்.
11. மூக்கில் நீர் வடியும் அல்லது இரத்தம் வடியும்.
வெள்ளை பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்:
வெள்ளை பூஞ்சை தொற்று நுரையீரல், தோல், நகங்கள், வாய் , வயிறு, குடல், இனப்பெருக்க உறுப்புகள் மற்றும் மூளை உள்ளிட்ட உறுப்புகளை பெருமளவில் பாதிக்கக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதது, சுத்தமில்லாத தண்ணீர் பயன்படுத்துவது மற்றும் சுகாதாரமற்ற முறைகளால், வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு ஏற்படும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
1.கொரோனா தொற்றில் ஏற்பட்ட பாதிப்புகள் போலவே, வெள்ளை பூஞ்சை தொற்றின் அறிகுறிகள் இருக்கும்
2.ஆர்டிபிசிஆர் சோதனை செய்து பார்த்தல் நெகட்டிவ் என வரும். ஆனால் மக்கள் சி.டி-ஸ்கேன் அல்லது எக்ஸ்ரே
எடுத்து பார்த்துதான் பாதிப்பை அறிந்து கொள்ள முடியும். அதன் பின் சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியமானது.
3.கோவிட் நோயாளிகள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், புற்றுநோய் நோயாளிகள் மற்றும் நீண்ட காலத்திற்கு ஸ்டெராய்டுகளை உட்கொள்பவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு, வெள்ளை பூஞ்சை தொற்று பாதிப்பு எளிதாக ஏற்படுகிறது.
4.ஆக்சிஜன் சிலிண்டர்கள் மாற்றும் போது தொற்று பரவலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மக்கள் மெத்தனம் காட்டாமல் ஆரம்ப காலத்திலே கண்டறிந்து, சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
மஞ்சள் பூஞ்சை தொற்றின் அறிகுறிகள்:
பசியின்மை
திடீர் உடல் எடை இழப்பு
கண்கள் வீக்கமடையும்,பார்வை இழத்தல்
சோம்பல்
உடலில் உள்ள புண்களின் இருந்து சீழ் வடிதல்
காயம் மெதுவாக குணமடைதல்
உறுப்புகள் செயலிழத்தல்
வீடுகள் மற்றும் நாம் பயன்படுத்தும் கழிவறைகள் சுத்தமாக இருக்கவேண்டும். நீர் மற்றும் அழுக்கள் தேங்கி இருந்தால், பாக்டீரியா, பூஞ்சை உள்ளிட்ட தொற்றுக்கள் எளிதில் ஏற்பட்டுவிடும். இதனால் பழைய உணவுகள், அழுகிய காய்கறிகள் உள்ளிட்டவவற்றை உண்பதை தவிர்க்கவேண்டும். குறிப்பாக வீடுகளில் ஈரப்பதம் இல்லாமல் சூரிய ஒளி படும்படி தரை மற்றும் சுவர்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aarna Janani
Contact at support@indiaglitz.com
Comments