ஆந்திர முதல்வருக்கு கோவில்… குறைகளை தெரிவிக்க பெட்டி வைத்து அசத்தல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆந்திர அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தற்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநில சட்டமன்ற உறுப்பினர் மதுசூதனன் ரெட்டி கோவில் கட்டியுள்ளார். மேலும் இந்தக் கோவிலில் பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கப் பெட்டி வைக்கப்பட்டு இருக்கிறது.
ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு அம்மாநில மக்களிடையே அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அவர் கொண்டுவரும் திட்டங்களால் மக்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்படுகிறார். இந்நிலையில் ஆந்திராவின் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தியில் “ஜெகண்ணா நவரத்னா கோவில்“ என்ற பெயரில் ரூ.2 கோடி பொருட்செலவில் கோவில் அமைக்கப்பட்டு உள்ளது.
நவரத்னா திட்டத்தின் மூலம் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து அதைக் களைவதற்கு பணியாளர்கள் அமர்த்தப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டியின் சிலை வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்டு இருக்கிறது. அவருடைய குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களும் செம்பினால் செய்யப்பட்ட தூண்களில் வடிவமைக்கப்பட்டு ஜொலிக்கின்றன.
ஆந்திர மாநில முதல்வருக்கு எம்எல்ஏ மதுசூதன் கோவில் கட்டி இருப்பது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் உறுப்பினர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout