90% வெற்றியுடன் புதிய கொரோனா தடுப்பூசி… மக்கள் மத்தியில் நம்பிக்கை அளிக்குமா புது அறிவிப்பு?

  • IndiaGlitz, [Tuesday,November 10 2020]

 

உலக நாடுகள் முழுவதும் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை எந்த மருந்து நிறுவனமும் கொரோனா தடுப்பூசி குறித்த இறுதி அறிவிப்பை வெளியிட வில்லை. எனவே கொரோனா அச்சம் தொடர்ந்து மக்களிடம் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிஃப்சர் மற்றும் பயோஎன்டெக் எனும் இரு மருந்து நிறுவனங்கள் இணைந்து உருவாக்கிய கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவுகள் உலக விஞ்ஞானிகளிடையே புது நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிறுவனம் உருவாக்கி இருக்கும் புதிய கொரோனா தடுப்பூசி கொரோனா வைரஸ்க்கு எதிரான 90% வெற்றியை வெளிப்படுத்துகிறது என அதன் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த அறிவிப்பை ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் பீட்டா ஹார்வி மிகவும் வரவேற்று புது நம்பிக்கை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டு உள்ளார். மேலும் பிரிட்டன் அரசாங்கத்தின் செய்தி தொடர்பாளரும் இந்த கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வு முடிவை நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது எனத் தெரிவித்து இருக்கிறார்.

மேலும் தடுப்பூசி கண்டுபிடிப்பின் 3 ஆம் கட்டச் சோதனையில் இந்த கொரோனா தடுப்பூசி வைரஸ்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதோடு நோய்த்தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் டி செல்களை உடலில் உருவாக்குகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிஃப்சர் மருந்து நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியானது அமெரிக்கா, ஜெர்மனி, அர்ஜென்டைனா, பிரேசில், பிரான்ஸ், தென் ஆப்பிரிக்கா எனும் 6 உலக நாடுகளில் உள்ள 43,500 பேரிடம் சோதனைச் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற சோதனையில் எந்த பக்கவிளைவுகளையும் இந்தத் தடுப்பூசி ஏற்படுத்தவில்லை என்று பிஃப்சர் மருந்து நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனால் உலக நாடுகள் புது நம்பிக்கையை பெறமுடியும் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது. எனவே அதன் முதற்கட்டமாக 3 வார இடைவெளிக்குள் 2 முறை இத்தடுப்பூசி மருந்தை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பிஃப்சர் தயாரித்த கொரோனா தடுப்பூசி மருந்தின் 50 மில்லியன் டோஸ்கள் உருவாக்கப்பட இருக்கிறது என்றும் அடுத்த 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 90 பில்லியன் டோஸ் மருந்துகள் தயாரிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆண்டிபாடி, நோய்க்கு எதிரான குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் டி செல் உருவாக்கம் என பல முன்னேற்றமான முடிவுகளை அறிவித்து இருக்கும் பிஃப்சர் மருந்து நிறுவனத்தின புதிய கொரோனா தடுப்பூசி மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இந்த மருந்துகளை சேகரித்து வைப்பதில் உள்ள ஒரே ஒரு குறைபாடு மருந்துகளை எப்போது 80 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குள்ளேயே வைக்க வேண்டும் என்றும் அந்த மருந்து நிறுவனம் தெரிவித்து உள்ளது.

More News

சிறையில் இருக்கும் நடிகைக்காக காத்திருக்கும் படக்குழு!

சமீபத்தில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிந்ததே

எஸ்.ஏ.சி அரசியல் கட்சி விவகாரம்: விஜய் எடுத்த அதிரடி முடிவு

சமீபத்தில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் திடீரென தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ஒரு அரசியல் கட்சி ஆரம்பிப்பதாக அறிவித்தார்

முடிவுக்கு வந்தது விபிஎப் பிரச்சனை: தீபாவளிக்கு புதிய படங்கள் ரிலீஸா?

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இன்று முதல் திரையரங்குகள் திறக்கப்படுகின்றன

அர்ச்சனாவை பாட்டியாக்கிய பிக்பாஸ்: திருடனாக மாறும் பாலாஜி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் பல சுவராஸ்யமாக இருக்கும் நிலையில் இன்று பிக்பாஸ், போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க், 'பாட்டி சொல்லை தட்டாதே'

 5 முறை காதலைச் சொன்ன பிறகே நான் அவரை ஏற்றுக்கொண்டேன்… மனம் திறக்கும் அமெரிக்க முதல் பெண்மணி!

தற்போது நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்லில் பெரும்பான்மை வெற்றிப் பெற்றிருக்கிறார்