'மெர்சல்' முதல் பார்வையில் இதை யாராவது கவனித்தீர்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டில் 'மெர்சல்' என்பதையும் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் சற்று முன் பார்த்தோம். இந்த நிலையில் இந்த போஸ்டரை கூர்ந்து கவனித்தவர்களுக்கு விஜய் பெற்றிருக்கும் புரமோஷன் குறித்து தெரிந்திருக்கும்
அதாவது இதுவரை இளையதளபதி என்றே அழைக்கப்பட்டு வந்த விஜய், இந்த படத்தின் மூலம் தளபதியாக புரமோஷன் ஆகியுள்ளார். ஆம், மெர்சல் டைட்டிலின் மேல் 'தளபதி விஜய்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விஜய் கடந்த சில வருடங்களில் நடிப்பில் மட்டுமின்றி அனைத்து விஷயங்களிலும் பக்குவப்பட்டு உள்ளார். சமீபத்திய அவரது பேச்சிலும் ஒரு முதிர்ச்சி தெரிவதை கவனித்திருக்கலாம். எனவேதான் டைட்டிலில் 'இளைய' என்பது தூக்கப்பட்டு 'தளபதி' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக விஜய் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments