விஜய்சேதுபதியின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து அவற்றில் பெரும்பாலான படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார். அதேபோல் இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை கைகொடுக்க தனது சொந்த திரைப்பட பேனரில் தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். அவ்வாறு வெளிவந்த படங்களில் ஒன்றுதான் கடந்த ஆண்டு வெளியான 'மேற்குத்தொடர்ச்சி மலை'.
இந்த நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த தயாரிப்பு திரைப்படத்திற்கு 'சென்னை பழனி மார்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி கதை, திரைக்கதை எழுதும் இந்த படத்தை பிஜூ என்பவர் இயக்கி வருகிறார். இயக்குவது மட்டுமின்றி ஒளிப்பதிவு மற்றும் எடிட்டர் பணியையும் பிஜூ அவர்களே செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 22ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
#ChennaiPalaniMars first look ll be released on 22nd May.
— VijaySethupathi (@VijaySethuOffl) May 18, 2019
From The Dir of #OrangeMittai@vsp_productions #OrangeMittaiProductions pic.twitter.com/oMBsotTnYY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com