விஜய்சேதுபதியின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Saturday,May 18 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து அவற்றில் பெரும்பாலான படங்களை வெற்றிப்படங்களாக கொடுத்து வருகிறார். அதேபோல் இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை கைகொடுக்க தனது சொந்த திரைப்பட பேனரில் தரமான படங்களை தயாரித்தும் வருகிறார். அவ்வாறு வெளிவந்த படங்களில் ஒன்றுதான் கடந்த ஆண்டு வெளியான 'மேற்குத்தொடர்ச்சி மலை'.

இந்த நிலையில் விஜய்சேதுபதியின் அடுத்த தயாரிப்பு திரைப்படத்திற்கு 'சென்னை பழனி மார்ஸ்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி கதை, திரைக்கதை எழுதும் இந்த படத்தை பிஜூ என்பவர் இயக்கி வருகிறார். இயக்குவது மட்டுமின்றி ஒளிப்பதிவு மற்றும் எடிட்டர் பணியையும் பிஜூ அவர்களே செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் 22ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

More News

பிரதமர் மோடியின் 2வது பிரஸ்மீட்: கலாய்த்த கஸ்தூரி

பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு பதவியேற்ற பின்னர் முதல்முறையாக நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ஆனால் இந்த பேட்டியிலும் அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லவே இல்லை.

கடனை திருப்பி கேட்ட இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் கைது!

கொடைக்கானல் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர்  தனது நண்பர் ஒருவரிடம் கொடுத்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அடைந்த அந்த நண்பர், அந்த இளம்பெண்ணை லாட்ஜ் அறை ஒன்றில் பாலியல்  பலாத்காரம் செய்து

ரஜினி கட்சி தொடங்குவது எப்போது? தமிழருவி மணியன் பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

6 ஆண்டுகள் கழித்தும் மீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய் படங்கள் ரிலீஸ்?

அஜித் நடித்த 'வீரம்' மற்றும் விஜய் நடித்த 'ஜில்லா' ஆகிய இரண்டு திரைப்படங்களும் கடந்த 2014ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியானது.

'காஞ்சனா' இந்தி ரீமேக் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது.