சிவகார்த்திகேயனின் 'டாக்டர்' படத்தின் அட்டகாசமான அப்டேட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் தற்போது ’இன்று நேற்று நாளை’ இயக்குனர் ரவிக்குமார் இயக்கி வரும் ’அயலான்’ என்ற படத்திலும் கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் இயக்கி வரும் ‘டாக்டர்’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இரண்டு படங்களின் படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ‘டாக்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை காலை 11.03 மணிக்கு சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை வரவேற்கவும் வைரலாக்கவும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தில் வில்லனாக வினய் நடிக்கவுள்ளார். மேலும் யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.
?? Our #DOCTOR first look will be released on the occasion of our dearest @Siva_Kartikeyan's birthday, tomorrow at 11:03AM
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 16, 2020
Get ready??#DoctorFirstLook@KalaiArasu_ | @kjr_studios | @Nelson_director | @anirudhofficial | @priyankaamohan | @iYogiBabu | @KVijayKartik | @nirmalcuts pic.twitter.com/SQ2g6qonkC
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com