நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி

  • IndiaGlitz, [Monday,October 08 2018]

தமிழ் திரையுலகில் ஒரு நடிகை ஒருசில ஆண்டுகள் கதாநாயகியாக நடிப்பதே பெரிய விஷயம். இந்த நிலையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த 13 வருடங்களாக நாயகியாக நடிப்பது மட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளாக நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் மட்டும் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான 'கோலமாவு கோகிலா', 'இமைக்கா நொடிகள்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் நயன்தாராவின் 63வது படத்தை இயக்குனர் சர்ஜுன் இயக்கி வருகிறார். இவர் லட்சுமி, மா ஆகிய குறும்படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நயன்தாரா, பேய்களை ஆராய்ச்சி செய்யும் கேரக்டரில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை அதாவாது அக்டோபர் 9ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நயன்தாரா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி என்பதை சொல்லவே தேவையில்லை.

இந்த படத்தை நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை தயாரித்த கே.ஜே.ஆர். ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது.

More News

சென்னை காவல்துறை ஆணையருடன் கருணாகரன் சந்திப்பு! புகார் அளித்தாரா?

சர்கார்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் ஒரு பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் பேசியிருப்பார். இந்த பேச்சு சில நாட்களாக தமிழக அரசியலில் புயலை கிளப்பியது.

பாலியல் புகாரில் வைரமுத்து: சின்மயி தந்த அதிர்ச்சி தகவல்

பாடகி சின்மயி கடந்த சில நாட்களாக தன்னுடைய இளவயதில் ஏற்பட்ட பாலியல் தொந்தரவு குறித்த கசப்பான அனுபவத்தையும், தனக்கு நெருக்கமான பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் அசம்பாவித சம்பவங்களையும்

ரகசிய திருமணமா? வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

தமிழ் சினிமாவில் பிசியான நடிகைகளில் ஒருவர் வரலட்சுமி. விஜய்யின் 'சர்கார்' விஷாலின் 'சண்டக்கோழி 2' உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.

வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சி: இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்

'குயீன் பட இயக்குனர் விகாஸ் பெஹல் தனக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்க முயற்சித்ததாக பிரபல நடிகை ஒருவர் திடுக்கிடும் புகார் அளித்துள்ளார்.

விஷாலின் 'சண்டக்கோழி 2' சென்சார் தகவல்கள்

விஷால் நடிப்பில் இயக்குனர் லிங்குசாமி இயக்கியுள்ள 'சண்டக்கோழி 2' திரைப்படம் வரும் ஆயுதபூஜை தினத்தில் வெளியாகும் என ஏற்கனவே படக்குழுவினர் உறுதி செய்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் தகவல்கள்