விஜய்சேதுபதியின் 'றெக்க' ஃபர்ஸ்ட்லுக் வெளியாகும் தேதி-நேரம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Wednesday,May 11 2016]


தமிழ் திரையுலகின் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவரான விஜய்சேதுபதி நடித்த 'இறைவி' மற்றும் 'தர்மதுரை' விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் அவர் நடித்து வரும் 'ஆண்டவன் கட்டளை' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் ரத்தினசிவா இயக்கத்தில் விஜய்சேதுபதி 'றெக்க' என்ற படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னயில் நடைபெற்றது என்பதையும், இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் தொடங்கவுள்ளது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் 'றெக்க' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கவுள்ள இந்த படத்தை விஜய்சேதுபதியின் நண்பர் கணேஷ் தயாரிக்கவுள்ளார்.

More News

'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' டிராக் லிஸ்ட்

ஜி.வி.பிரகாஷ், 'கயல்' ஆனந்தி நடித்துள்ள 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெறவுள்ளது...

'காக்கா முட்டை-ஆண்டவன் கட்டளை' என்ன வித்தியாசம். விளக்குகிறார் மணிகண்டன்

தனுஷ் தயாரித்த 'காக்கா முட்டை' என்ற ஒரே படத்தின் மூலம் உலக அளவில் பிரபலமானவர் இயக்குனர் மணிகண்டன்.....

'கோ 2' ஆதரிக்கும் கட்சி எது? விளக்குகிறார் இயக்குனர் சரத்

தமிழக சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் சரியான 3 நாட்களுக்கு முன்னர் அதாவது மே 13ஆம் தேதி வெளியாகவிருக்கும் அரசியல் படம் 'கோ 2' தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....

குழந்தைகளுக்கு '24' படக்குழுவினர் தரும் மேஜிக் பரிசு

சூர்யா நடிப்பில் கடந்த வெள்ளியன்று வெளியான '24' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது....