இந்தியாவில் முதல் கொரோனா பலி: உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் தொடங்கி உலகில் 100 நாடுகளுக்கும் மேல் பரவிவரும் கொரோனா வைரஸினால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இந்தியாவிலும் கொரோனா வைரஸ் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பெங்களூரைச் சேர்ந்த முகமது உசேன் சித்திக் என்ற 76 வயது முதியவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வைரஸ் பாதிப்பினால் மரணமடைந்தார் என்று செய்திகள் வெளியாகின.
கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதி சவுதி அரேபியா சென்ற முகமது உசேன் சித்திக், பிப்ரவரி 23ஆம் தேதி நாடு திரும்பினார். அவருக்கு தொடர்ச்சியாக இருமல் மற்றும் காய்ச்சல் இருந்து வததால் கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதை அறிந்து கொள்ள அவருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது அவர் கொரோனா வைரஸால் தாக்கப்பட்டது உறுதிசெய்யப்பட்டது.
இதனை அடுத்து நேற்று முன்தினம் அவர் மரணமடைந்தார். இருப்பினும் அவருக்கு ஆஸ்துமா உள்பட ஒரு சில நோய்கள் இருந்ததால் அவர் கொரோனா வைரசால் தான் இறந்தார் என்பது உறுதிசெய்யப்படவில்லை. இந்த நிலையில் தற்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருடைய மரணம் கொரோனா வைரசால் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் முதன்முதலாக கொரோனாவுக்கு ஒரு உயிர் பலியாகியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout