இந்த ஆண்டின் முதல் ஹிட் படத்தின் சென்னை வசூல் நிலவரம்

  • IndiaGlitz, [Monday,March 05 2018]

2018ஆம் ஆண்டில் பலதிரைப்படங்கள் வெளிவந்திருந்தபோதிலும், விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் திருப்திகரமான லாபத்தை கொடுத்த முதல் படம் என்ற பெருமை சுந்தர் சி இயக்கிய 'கலகலப்பு 2' திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது.

கடந்த மாதம் 9ஆம் தேதி வெளிவந்த இந்த திரைப்படம் நேற்று வரை சென்னையில் மட்டும் ரூ.4,23,65,483 வசூல் செய்துள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக தயாரிப்பாளர் சங்கத்தின் வேலைநிறுத்தம் காரணமாக வேறு புதிய திரைப்படங்கள் வெளியாகாததால் இன்னும் இந்த படத்திற்கு நல்ல வசூல் கிடைத்து வருகிறது.

கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் இந்த படம் 13 திரையரங்குகளில் 108 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.27,43,733 வசூல் செய்துள்ளது. திரையரங்குகளில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா: இதுவரை பெற்ற விருதுகளின் விபரம்

90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள விருதுகளின் விபரங்கள் குறித்து தற்போது பார்ப்போம்

நயன்தாராவின் 'இமைக்கா நொடிகள்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அதர்வா நடிப்பில் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தளபதி 62' படத்தில் திடீரென இணைந்த வரலட்சுமி

பாலா இயக்கிய 'தாரை தப்பட்டை' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் அந்த படத்தில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்த நடிகை வரலட்சுமிக்கு வாய்ப்புகள் குவிந்தன

ஜெயலலிதா நினைவிடத்தின் பாதுகாப்பு போலீஸ் திடீர் தற்கொலை! காரணம் என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லம் சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் உள்ளது. இந்த நினைவிடத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.

பிரபல நகைச்சுவை நடிகர் ரமேஷ்திலக் திருமணம்

நேரம், வாயை மூடி பேசவும், சூது கவ்வும், டிமாண்டி காலனி, காக்கா முட்டை, வேதாளம் உள்பட பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்தவர் ரமேஷ் திலக்.