முதல் நாள் முதல் பாடல்.. ரவீனாவை இடுப்பில் தூக்கி உட்கார வைத்த மணி..!

  • IndiaGlitz, [Monday,October 02 2023]

பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று சிறப்பாக தொடங்கிய நிலையில் அந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று முதல் நாளில் வேக்கப் பாடல் ஒளிபரப்பான நிலையில் ’நான் ரெடியா வரவா’ என்ற ‘லியோ’ பாடலுக்கு போட்டியாளர்கள் செம டான்ஸ் ஆடினர்.

இந்த பாடலின் இறுதியில் திடீரென ரவீனாவை மணிச்சந்திரா இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டது கலகலப்பை ஏற்படுத்தி. ஏற்கனவே ரவீனாவும் மணிசந்திராவும் காதலிக்கிறார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. இருவரது சமூக வலைத்தளங்களிலும் இருவரும் இணைந்த புகைப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தொடக்க எபிசோடில் மணிச்சந்திராவின் பிக்பாஸ் எண்ட்ரியை பார்த்து ஆச்சரியமடைந்த ரவீனா, ‘நீயுமா’ என்று கேட்க, நான் வருவதை நீ எதிர்பார்க்கவே இல்லைல’ என்று மணிச்சந்திரா கூறியதை அனைவரும் பார்த்தோம்.

மொத்தத்தில் ரவீனா , மணிச்சந்திரா ஜோடி இந்த சீசனை ரொமான்ஸ் ஆக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.