சாத்தன்குளம் சம்பவம் குறித்து கருத்து சொன்ன முதல் இந்திய கிரிக்கெட் அணி வீரர்!

சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தை ஜெயராஜ் மற்றும் அவரது மகன் ஃபென்னிஸ் ஆகியோர் காவல்நிலையத்தில் மர்மமான முறையில் மரணமடைந்த விவகாரம் தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் தற்போது உலுக்கி வருகிறது

அமெரிக்காவில் கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் ஃபிளாய்ட் எனப்வரை அந்நாட்டு போலீசார் கழுத்தை நெரித்து கொன்ற சம்பவத்திற்கு இணையாக தற்போது இந்தியா முழுவதும் இந்த விவகாரம் மிகவும் பரபரப்பாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது. இதற்காக டுவிட்டரில் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக் பதிவுசெய்யப்பட்டு ஜெயராஜ், ஃபென்னிஸ் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் ஒலித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து மதுரை உயர்நீதிமன்ற கிளை தானாகவே முன்வந்து இதுகுறித்த வழக்கை பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பொதுவாக அரசாங்கத்தை எதிர்த்துக் குரல் கொடுக்காத நடுநிலையாக உள்ள நடிகர், நடிகைகள் உள்பட திரையுலகை சேர்ந்தவர்கள் கூட சாத்தான்குளம் மரணத்தை கண்டித்து தங்களது சமூக வலைத்தளத்தில் காரசாரமாக பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது முதன் முதலாக சாத்தான்குளம் சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஷிகர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் ஃபென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தை கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்கவேண்டும். இறந்தவர்களின் குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும். என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஷ்டேக்கையும் அவர் தனது டுவிட்டில் பயன்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிகர் தவானின் இந்த ட்வீட்டை சுமார் 10 ஆயிரம் பேர் லைக்ஸ் செய்தும் 5000 பேர் ரிடுவிட் செய்தும் உள்ளனர்