ஆந்திராவிலும் நுழைந்த கொரோனா: இத்தாலியில் இருந்து திரும்பிய மாணவருக்கு பாசிட்டிவ்

சீனாவில் தொடங்கி உலகெங்கும் பரவி வரும் கொரோனா வைரஸ் சமீபத்தில் இந்தியாவிலும் பரவி வரும் நிலையில் அண்டை மாநிலமான ஆந்திராவில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது ரத்த பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.

கடந்த 6ஆம் தேதி இத்தாலியில் இருந்து ஆந்திரா திரும்பிய நெல்லூரை சேர்ந்த மாணவர் ஒருவருக்கு இருமல், காய்ச்சல் இருந்ததை அடுத்து அவருக்கு கொரோனா இருக்கின்றதா? என்று பரிசோதனை செய்ய ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.  திருப்பதி வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த மாணவருக்கு தற்போது கொரோனா தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் கொஞ்சம் கொஞ்சமாக அவர் குணமாகி வருவதாகவும், 14 நாட்கள் கழித்து மீண்டும் ரத்த பரிசோதனை செய்து அதில் அவர் குணமாகிவிட்டது தெரிந்தால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

More News

பிகில், மாஸ்டர் திரைபடங்களுக்கு விஜய்யின் சம்பளம் எவ்வளவு? வருமான வரித்துறையினர் தகவல்

தளபதி விஜய் வீட்டில் இன்று மீண்டும் வருமானவரித்துறை ரெய்டு நடந்ததாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் வருமான வரித்துறையினர் ரெய்டு முடிவடைந்ததாகவும்

தமிழகப் பள்ளிகளுக்கு விடுமுறை??? இது குறித்த உயர் நீதிமன்றத்தின் உத்தரவு

இந்தியா முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்திருக்கிறது. இதனால் ஒவ்வொரு மாநில சுகாதாரத் துறை அமைச்சகமும் கடுமையான

ரஜினியின் முடிவை வரவேற்கிறோம்: சீமான்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.

போங்கய்யா நீங்களும் உங்க கொரோனாவும்: 'கோப்ரா' இயக்குனர் அதிருப்தி

விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கி வரும் 'கோப்ரா' திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில்

எண்டெமிக்.. எபிடெமிக்.. பாண்டமிக்.. அப்படினா என்னனு தெரியுமா..?! #COVID19pandemic

இன்று உலக சுகாதார நிறுவனமானது கொரோனா வைரஸினை உலகமுழுக்க பரவியுள்ள பெருந்தொற்று நோயாக(pandemic) அறிவித்துள்ளது.