கொரோனா நோய் எதிர்ப்பு ஆற்றலோடு பிறந்த உலகின் முதல் குழந்தை… அதிர்ச்சி தகவல்!
- IndiaGlitz, [Friday,March 19 2021]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 39 ஆயிரத்து 726 ஆக அதிகரித்து இருக்கிறது. கடந்த சில மாதங்களாக குறைந்த எண்ணிக்கையில் பதிவான கொரோனா நோய்த்தொற்று கடந்த பத்து நாட்களில் படிப்படியாக அதிகரித்து இந்தியாவில் பீதியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா வைரஸில் வீரியம் மிக்க புதிய மரபணு மாற்றம் ஏற்பட்டு உலக முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையும் தீவிரம் பெற்று இருக்கிறது. மேலும் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு ஒரே தீர்வாக தடுப்பூசி மட்டுமே பார்க்கப்படுகிறது. இப்படி கொரோனா தடுப்பூசி செலுத்துக் கொள்வதால் உலகம் முழுவதும் மந்தை நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றலை பெற முடியும். மேலும் எதிர்காலத்தில் கொரோனா நோய்த்தொற்று தாக்கத்தில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியும்.
இந்நிலையில் எந்த தடுப்பூசியும் செலுத்தாமல், இயற்கையாகவே ஒரு குழந்தை கொரோனா நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் பிறந்து இருப்பது கடும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பணியாற்றி வந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவருக்கு கடந்த 3 வாரத்திற்கு முன்பு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. மேலும் அவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டபோது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். தற்போது இந்த பெண்மணிக்கு பிறந்த குழந்தைக்கு இயற்கையாகவே உடலில் கொரோனா நோயை எதிர்க்கும் ஆற்றல் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
பொதுவாக கர்ப்பிணி தாய்க்கு கொரோனா பாதிப்பு இருக்கும்போது குழந்தையை அந்த நோய்த் தாக்குவது இல்லை என மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக தாய்க்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி மூலம் குழந்தை நோய் எதிர்ப்பு ஆற்றல் பெற்று இருப்பது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய நோய் எதிர்ப்பு ஆற்றல் எதிர்காலத்தில் மனித குலத்தை காப்பதற்கு ஒரு வழியாக இருக்கும் என விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர் .