விஷாலுக்கு முதல் பெருமையை தந்த சென்னை
- IndiaGlitz, [Monday,June 04 2018]
விஷால், சமந்தா நடிப்பில் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியான 'இரும்புத்திரை' திரைப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று நல்ல வசூலை பெற்று கொண்டிருக்கின்றது. டிஜிட்டல் உலகம் குறித்த பலரும் அறியாத அபாயங்கள், அர்ஜூனின் ஆக்ரோஷமான வில்லத்தனமான நடிப்பு இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள் ஆகும்.
இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் 13 திரையரங்க வளாகங்களில் 135 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.42,22,984 வசூல் செய்துள்ளது. மேலும் 4வது வாரத்திலும் திரையரங்கில் 80% பார்வையாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 'இரும்புத்திரை' திரைபப்ட்ம் ரிலீஸ் ஆன மே 11ஆம் தேதியில் இருந்து மே 27 வரையிலான தேதிகளில் மட்டும் ரூ.5,28,64,092 சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது. சென்னையில் ரூ.5 கோடிக்கும் மேல் வசூல் செய்த முதல் விஷால் படம் என்ற பெருமையை 'இரும்புத்திரை திரைப்படம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த படம் தமிழகம் முழுவதும் கடந்த 24 நாட்களில் 27.65 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் ஆந்திராவில் ரூ.8.1 கோடியும், கேரளாவில் ரு.1.9 கோஇட்யும், கர்நாடகாவில் ரூ.2.6 கோடியும் வெளிநாடுகளில் ரூ.7 கோடியும் வசூல் செய்துள்ளது.
எனவே 'இரும்புத்திரை' திரைப்படம் சென்னையில் ரூ.5 கோடி வசூல் செய்த முதல் விஷால் படம் என்பது மட்டுமின்றி ரூ.50 கோடி வசூல் செய்த முதல் விஷால் படம் என்ற பெருமையும் கிடைத்துள்ளது.