தேவைப்பட்டால் எல்லாவற்றையும் சோஷியல் மீடியாவில் போடுவேன்: ரச்சிதாவை மிரட்டுகிறாரா தயாரிப்பாளர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தனது சமூக வலைதளத்தில் பிக்பாஸ் ரச்சிதாவை எல்லாவற்றையும் சோசியல் மீடியாவில் போட வேண்டிய நிலை ஏற்படும் என மிரட்டல் எடுக்கும் வகையில் செய்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்சி அகர்வால் உள்ளிட்டோர் நடித்த ’ஃபயர்’ என்ற திரைப்படம் உருவாகி இருந்த நிலையில் இந்த படத்தில் நடித்ததற்காக ஒரு பைசா கூட சம்பளம் கிடைக்கவில்லை என பாலாஜி முருகதாஸ் சமீபத்தில் பதிவு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் இதே படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ரச்சிதா மகாலட்சுமி ’உங்களுக்கு இப்பொழுது தான் தெரிகிறது, ஆனால் எனக்கு ஏற்கனவே தெரியும், இதே போன்ற ஒரு நிலைமை அவருக்கும் ஏற்படும், இப்போது நான் தனியாள் இல்லை என்பது தெரிந்து விட்டது’ என்று பதிவு செய்துள்ளார்
மேலும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஜேஎஸ்கே சதீஷ் குறித்து அவர் கூறிய போது ’நீங்கள் ஒரு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக இருக்கலாம், அதற்காக என்ன வேண்டுமானாலும் பண்ணலாம் என்று நினைக்காதீர்கள், தன்வினை தன்னைச் சுடும், நீங்கள் ஒரு தயாரிப்பாளர் என்று சொல்வதற்கே அருகதையற்றவர்’ என்று கூறியிருந்தார்.
இதற்கு பதில் கூறிய சதீஷ் தனது சமூக வலைதளத்தில் ’நீங்கள் நடித்தது தான் உங்கள் பிறந்தநாளுக்கு கிளிம்ஸ் ஆக போட்டு இருக்கிறேன், நடிக்காததை கிராபிக்ஸ் பண்ணி போடவில்லை, இன்னும் படம் வெளியே வரும் போது நீங்கள் நடித்த காட்சிகள் எல்லாம் வெளியில் வரும், நீங்கள் சம்பளம் வாங்கிவிட்டு தான் நடித்திருக்கிறீர்கள், இனாமாக நடித்து கொடுக்கவில்லை, அதற்கு அக்ரீமெண்ட் என் கையில் இருக்கிறது, நீங்கள் பணம் வாங்கியதற்கு ஆதாரமும் என் கையில் இருக்கிறது.
அதனால் உங்களை நீங்களே தாழ்த்திக்காதிங்க, தேவைப்பட்டால் எல்லாவற்றையும் நான் சோசியல் மீடியாவில் போடுகிற மாதிரி வரும், மதுரை வினையும் பிக் பாஸ் வினையும் தன்னைத்தோடும், குருவே சரணம்’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ‘ஃபயர்’ திரைப்படத்தில் தாங்கள் நடித்ததை மறந்து விட்டீர்கள், அந்த படத்தை ஷிட் என்று விமர்சனம் செய்துள்ளீர்கள், அந்த ஷிட்டில்தான் நீங்களும் உள்ளீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com