சென்னை எஸ்பிஐ வங்கியில் தீவிபத்து. வாடிக்கையாளர்களின் பணத்திற்கு பாதிப்பு வருமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்பிஐ வங்கியின் கிளையில் இன்று காலை 9 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் தீயணைப்பு துறை ஏடிஜிபி குடவாலா தீ விபத்து ஏற்பட்டுள்ள எஸ்பிஐ காப்பீட்டு நிறுவன கிளையை பார்வையிட்டார்
வங்கியில் உள்ள குளிர்சாதன இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணத்தால் இந்த விபத்து ஏற்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து எஸ்பிஐ காப்பீட்டு நிறுவனத்தின் மண்டல மேலாளர்கள் சுகந்தி சுப்பிரமணியன் கூறியபோது, 'தீ விபத்து நடந்த கிளையின் அனைத்து ஆவணங்களும் டிஜி்ட்டல் பிரதியில் இருப்பதால் வாடிக்கையாளர்கள் கவலை அடைய தேவையில்லை. இந்த தீவிபத்தால் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பு இருக்காது' என்று கூறினார்.
இந்த தீவிபத்தில் வங்கியில் உள்ள ஏராளமான ஆவணங்களும், கம்ப்யூட்டர்களும் தீயில் சேதம் அடைந்ததாகவும், ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout