மும்பை வருமான வரி அலுவலகத்தில் தீவிபத்து: நீரவ் மோடி, விஜய் மல்லையா குறித்த முக்கிய ஃபைல்கள் சாம்பலா?

  • IndiaGlitz, [Monday,June 04 2018]

மும்பை நகரில் உள்ள பல்லார்டு பியர் என்ற பகுதியில் உள்ள சிந்தியா ஹவுஸ் என்ற அடுக்குமாடி கட்டிடத்தில் வருமான வரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கடந்த வெள்ளியன்று மாலை 4 மணியளவில் இந்த கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

முதலில் கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளி வந்தததாகவும், அடுத்த சில நிமிடங்களில் தீ மளமளவென 3-வது மாடியில் இருந்த மற்ற அறைகளுக்கும் பரவியதுடன், பின்னர் காற்றின் வேகம் அதிகரித்ததால் தீ 4-வது மாடியிலும் பற்றியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த அலுவலகத்தில் தான் வங்கி மோசடி செய்த தொழிலதிபர்களான விஜய் மல்லையா, நீரவ் மோடி ஆகியோர்கள் வழக்குகள் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது அந்த ஆவணங்கள் சாம்பலாகியிருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே இது தற்செயலாக நடந்த தீ விபத்தா? அல்லது சதியா? என்பது குறித்து விசாரணை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

More News

பிரபல இயக்குனருடன் நிச்சயதார்த்தம்: ஸ்வேதா பாசு அறிவிப்பு

தமிழில் 'ராரா', சந்தமாமா' ஆகிய படங்களிலும் ஒருசில தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை ஸ்வேதா பாசு. இவர் கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் இயக்குனர் ரோஹித் மிட்டலை காதலித்து வந்ததாக கூறப்பட்டது.

பிக்பாஸ் ஜூலி திடீரென மதம் மாறியது ஏன்? பரபரப்பு தகவல்

ஜல்லிக்கட்டு மற்றும் பிக்பாஸ் மூலம் தமிழக மக்களிடம் புகழ் பெற்ற ஜூலி, தற்போது ஒருசில திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கின்றார்.

'சாமி 2' டிரைலரை கலாய்த்த நடிகை கஸ்தூரி

விக்ரம், கீர்த்திசுரேஷ், பாபிசிம்ஹா நடிப்பில் ஹரி இயக்கி வரும் 'சாமி 2' திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது

நல்ல வேளை தப்பிச்சேன்? பழைய காதல் குறித்து சமந்தா அதிர்ச்சி தகவல்

தெலுங்கு நாளிதழ் ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த நடிகை சமந்தா, திருமணத்திற்கு முன் நிகழ்ந்த காதல் குறித்தும், அந்த அபாயத்தில் இருந்து தான் நல்லவேளையாக தப்பித்ததும் குறித்தும் குறிப்பிட்டுள்ளார். 

'காலா' குறித்து பேசுவது தேவையற்றது: கர்நாடக முதல்வர் சந்திப்புக்கு பின் கமல் பேட்டி

காவிரி பிரச்சனை குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி அவர்களிடம் பேசுவதற்காக நேற்று இரவு பெங்களூர் சென்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன்