சென்னை தி.நகர் பிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீவிபத்து

  • IndiaGlitz, [Wednesday,May 31 2017]

சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக உள்ளது.
தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள 7 மாடி கட்டிடம் ஒன்றில் பிரபல ஜவுளிக்கடை மற்றும் நகைக்கடை இயங்கி வருகிறது. இன்று அதிகாலை 5 மணியளவில் இந்த கடையின் தரைத்தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதன்பின் தீ மளமளவென அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவி வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் 6 தீயணைப்பு வாகனங்களில் 40க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க 5 மணி நேரத்துக்கும் அதிகமாக போராடி வருகின்றனர். தீவிபத்தால் ஏற்பட்ட வெப்பத்தின் காரணமாக கடையில் உள்ள கண்ணாடி வெடித்து சிதறி வருவதால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதோடு, அந்த பகுதியில் யாரும் கூடாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
கடைக்குள் தங்கியிருந்த 12 பணியாளர்கள் ஹைட்ராலிக் வாகனம் மூலம் மீட்கப்பட்டதாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீ விபத்து காரணமாக கட்டிடம் பலவீனம் அடைந்திருப்பதால் அந்த பகுதியே அபாயகரமானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

More News

பழம்பெரும் இயக்குனர் தாசரி நாராயண ராவ் மறைவு: கமல், ரஜினி இரங்கல்

தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் இயக்குனர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, நடிகர் தாசரி நாராயணராவ்...

ஜெயலலிதா, சசிகலா சொத்துக்களை பறிமுதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நால்வரும் குற்றவாளிகள் என்ற தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

திராவிட நாட்டிற்கு 'யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் சௌத் இந்தியா' என்று பெயர் வைத்த நெட்டிசன்கள்

மத்திய அரசு அறிவித்த மாட்டிறைச்சி தடை சட்டத்தால் மக்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட போகிறதோ தெரியாது.

பிரதமர் மோடியை தற்செயலாக ஜெர்மனியில் சந்தித்த பிரபல நடிகை

பாரத பிரதமர் நரேந்திரமோடி நான்கு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக ஜெர்மனி, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு நேற்று கிளம்பினார். இன்று காலை ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரை அடைந்த அவர் ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கில் உள்பட பல தலைவர்களை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை செய்கிறார்...

'காலா கரிகாலன்' படத்தலைப்பு. சென்னை கமிஷனர் ஆபீசில் புகார்

ரஜினிகாந்த் உள்பட பெரிய நடிகர்கள் படம் என்றாலே வழக்குகளை சந்திக்காமல் வெளிவந்ததில்லை என்பது கோலிவுட்டின் எழுதப்படாத வரலாறு. கதை, டைட்டில் உள்பட பல பிரச்சனைகள் படம் ஆரம்பித்தது முதல் ரிலீசுக்கு முந்தைய நாள் வரை வந்து கொண்டே இருக்கும்...