பிரிட்ஜ் வெடித்து டிவி செய்தியாளர் குடும்பத்துடன் பலி: சென்னை அருகே சோகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை அருகே டிவி செய்தியாளர் வீட்டில் பிரிட்ஜ் வெடித்ததால் ஏற்பட்ட விபத்தில் அவருடைய குடும்பமே பலியான சோக நிகழ்ச்சி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
சென்னை தாம்பரம் அருகே உள்ள சேலையூர் என்ற பகுதியை சேர்ந்த பிரசன்னா என்ற 32 வயது நபர் தனியார் தமிழ் செய்தி தொலைக்காட்சி ஒன்றில் செய்தியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு அர்ச்சனா என்ற மனைவியும், ரேவதி என்ற தாயாரும் உள்ளனர். இந்த நிலையில் இன்று அதிகாலை மூவரும் தூங்கி கொண்டிருந்தபோது திடீரென அவர்கள் வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து அதனால் ஏற்பட்ட புகையில் சிக்கி மூவரும் மூச்சுத்திணறி மரணம் அடைந்தனர்
இன்று காலை அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவை யாரும் திறக்காததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர்களிடம் கூறியுள்ளார். மேலும் வீட்டின் உள்பகுதியில் இருந்து புகையும் வந்து கொண்டிருந்ததால் உடனே அந்த பகுதியினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மூவரும் தீக்காயத்துடன் பலியாகி இருப்பது தெரியவந்தது
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மூன்று பிணங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். செய்தியாளர் ஒருவர் குடும்பத்துடன் பலியாகியிருப்பது மீடியாவுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments